Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2018 க்கான பாதுகாப்பு சேவை மேசைப் பந்து போட்டியில் இராணுவம் வெற்றி

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது பாதுகாப்பு சேவை மேசை பந்து போட்டி ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பனாகொடை விளையாட்டு உள்ளரங்கில் நடைப் பெற்றது. இப் போட்டியில் மொத்த சாம்பியன்ஷிப்பையும் இராணுவத்தினர் பெற்றுக் கொண்டதுடன் இராணுவ மேசைப் பந்து போட்டி வரலாற்றில் முதல் தடவையாக ஆண்கள் மற்றும் மகளிர் இரண்டு தங்க பதக்கத்தை தனதாக்கி கொண்டனர்.

இப் போட்டியில் ஆறு பிரிவுகளால் பாதுகாப்பு படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி 75 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இப் போட்டியானது இராணுவ, இராணுவ சேவை செயளாலரும் இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ மேசை பந்து குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களின் வழிகாட்லின் மற்றும் இராணுவ விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அனுர சுதசிங்க அவர்களின் மேற் பார்வையின் கீழ் நடைப் பெற்றது. இப் போட்டியில் இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி தமது திறமையை வெளிகாட்டினர்.

10 ஆவது பாதுகாப்பு சேவை மேசை பந்து போட்டியில் போட்டியிட இராணுவ மேசைப் பந்து விளையாட்டு வீரர்கள் மாத கணக்காக பயிற்சி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதல்கள் வழங்க பிரதம அதிதியாக இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணியும் விஜயபாகு காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்கள் கலந்து கொண்டதுடன் இலங்கை கடற் படை மற்றும் விமானப் படையினர் உட்பட மேசை பந்து குழுவின் தலைவரும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற இராணுவ வீரர்களின் விபரங்கள் கீழ் வருமாறு:

ஆண்கள் அணி - சாம்பியன்ஷிப்

ஆண்கள் தனி போட்டி நிகழ்வுகள் - சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டாம் இடம்

ஆண்கள் இருவருக்கான போட்டி நிகழ்வுகள் - சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டாம் இடம்

பெண்கள் அணி சாம்பியன்ஷிப் - சாம்பியன்ஷிப்

பெண்கள் தனி போட்டி நிகழ்வுகள் - சாம்பியன்ஷிப்

மற்றும் இரண்டாம் இடம்

பெண்கள் இருவருக்கான போட்டி நிகழ்வுகள் – சாம்பியன்ஷிப்

இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் :-

ஆண்கள் தனி போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

சாம்பியன்ஷிப் – சமிக்ஞை படையணியின் - சா /284990 சமிக்ஞை வீரர் பியங்கர வை.ஆர். எம்

இரண்டாம் இடம் - சமிக்ஞை படையணியின் அ/8477 கெப்டன் எல்.எஸ் கவிந்த

பெண்கள் தனி போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

சாம்பியன்ஷிப் – சமிக்ஞை படையணியின் வீ /101202 சமிக்ஞை வீராங்கனை வருஷவிதான ஈ.டி.

இரண்டாம் இடம் - சமிக்ஞை படையணியின் வீ /101201 சமிக்ஞை வீராங்கனை நவோதயா ஜீ.வீ.என்

ஆண்கள் இருவருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

சாம்பியன்ஷிப் - சமிக்ஞை படையணியின் வீ /284989 சமிக்ஞை வீரர் புஸ்ப குமார எம்.ஏ.எஸ் மற்றும் சமிக்ஞை படையணியின் வீ /101103 சமிக்ஞை வீரர் உதன்ஜய கே.டபில்யூ.ஐ

இரண்டாம் இடம் - சமிக்ஞை படையணியின் அ/8477 கெப்டன் எல்.எஸ் கவிந்த மற்றும் சமிக்ஞை படையணியின் - சா /284990 சமிக்ஞை வீரர் பியங்கர வை.ஆர். எம்

மகளிர் இருவருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

சாம்பியன்ஷிப் – சமிக்ஞை படையணியின் வீ 101202 சமிக்ஞை வீராங்கனை வருஷவிதான ஈ.டி. மற்றும் சமிக்ஞை படையணியின் வீ /101201 சமிக்ஞை வீராங்கனை நவோதயா ஜீ.வீ.என்Best jordan Sneakers | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today