Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2017 21:00:21 Hours

2017ஆம் ஆண்டிற்கான எதுகல்புர சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய இராணுவத்தினர்

குருணாகல் எதுகல்புர சதுரங்க விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான 9ஆவது சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டியானது குருணாகலில் உள்ள புளு ஸ்கை ஹோட்டலில் டிசெம்பர் மாதம் 14 – 18திகதிகளில் இடம் பெற்றதுடன் இதில் இராணுவ செஸ் விளையாட்டு வீரர்கள் வெற்றியீட்டினர்.

அகில ரீதியில் 34 வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த 600ற்கும் மேற்பட்ட செஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இராணுவத்தின் ஏ மற்றும் பீ குழுக்களாக பிரிந்து இவ் விளையாட்டில் போட்டியிட்டனர்.

இப் போட்டியில் இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த கெப்டன் டபிள்யு. ஏ. டி. டீ சுமணதாஸ வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டார்.

மேலும் விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் எஸ். எஸ். எம். டீ. எம் சுரவீர வெற்றிவாகை சூடிக் கொண்டார்.

அந்த வகையில் இலங்கை செஸ் கழகத்தின் நைட் ப்லேம் செஸ் கழகத்தினால் 2017ஆம் ஆண்டிற்காக 9ஆவது தடவையாக எதுகல்புரவில் இச் செஸ் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டது.

இப் போட்டிகளின் இறுதி நாளான திங்கட் கிழமை (18) இடம் பெற்ற விருது வழங்கும் நிகழ்வானது இக் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான போக்கு வரத்து அமைச்சின் பிரதியமைச்சரான கௌரவமிக்க அசோக் அபேசிங்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

வெற்றி பெற்ற போட்டியாளர்களின் பெயர்பட்டியல் பின்வருமாறு

ஏ குழு இராணுவத்தினர்

இலங்கை இராணுவ சேவை படையணியின் கெப்டன் டபிள்யு ஏ. டி. டி சுமனதாத

இலங்கை இராணுவ இயந்திர படையணியின் கோப்ரல் எம். ஏ. ஜீ. ஏ. பி பண்டார

இலங்கை இராணுவ காலட் படையணியின் லாஸ் கோப்ரல் டபிள்யு. பி. பி. ஜீ எஸ் பிரேமதிலக

இலங்கை இராணுவ மருத்துவ சேவை படையணியின் டி. என். எஸ். த சில்வா

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் சிக்னமன்ட் ஐ. டி. டி மதுசங்க

பி குழு இராணுவத்தினர்

இலங்கை இராணுவ சிங்க படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் வை. எம். எஸ். டி. கே யாப்பா

இலங்கை இராணுவ இயந்திர படையணியின் லெப்டினன்ட் இ. டி. எஸ் லக்மால்

இலங்கை இராணுவ விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் எஸ். எஸ். எம். டி. என் சுரவீர

இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணியின் லாஸ் கோப்ரல் எம் அமரவீர

Authentic Nike Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov