Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2017 11:45:04 Hours

2017 ஆண்டிற்கான தேசிய ஸ்கொச் விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைப்பு

இராணுவத்தினரின் அனுசரனையுடன் 37ஆவது தடவையாக இடம் பெற்ற 2017 ஆண்டிற்கான தேசிய ஸ்கொச் விளையாட்டு கடந்த செவ்வாய்க் கிழமை (19) கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம் பெற்றது.

இதன் போது நுாற்றிற்கும் மேற்பட்ட ஸ்கொச் விளையாட்டு வீரர்கள் தமது திறமையை டிசெம்பர் மாதம் 16- 19 வரை இடம் பெற்ற போட்டிகளில் காண்பித்துள்ளனர்.

அந்த வகையில் 2017 ஆண்டிற்கான தேசிய ஸ்கொச் விளையாட்டிற்கான அனுசரனையை நாட்டின் விளையாட்டுத் துறை அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு முதன் முறையாக இலங்கை இராணுவம் வழங்கி வைத்துள்ளது.

37ஆவது தடவையாக இடம் பெற்ற இவ் ஸ்கொச் விiயாட்டு நிகழ்வூகள் இலங்கை ஸ்கொச் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டுடன் விளையாட்டு அமைச்சு மற்றும் இராணுவ ஸ்கொச் கழகம் போன்றவற்றின் ஒருங்கிணைப்போடு எட்டு பிரிவுகளாக இப் போட்டி இடம் பெற்றது.

இவ்வாறு கடந்த செவ்வாய்க் கிழமை (19) இடம் பெற்ற தேசிய ஸ்கொச் போட்டிகளில் பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் இராணுபவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்வாறு இடம் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் திரு ரவிந்து லக்சரன மற்றும் செல்வி மிஹிலியா மெத்சரணி போன்றோர் வெற்றியீட்டியதுடன் இவர்களுக்கான 50,000 ருபா காசோலையை இராணுவத் தளபதியவர்கள் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை இராணுவ ஸ்கொச் கழகத்தின் தலைவரான பிரிகேடியர் இந்திரஜித் ,இராணுவ விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் அனுர சுதசிங்க ,தேசிய ஸ்கொச் விளையாட்டுக் கழகத்தின் தலைவரான ஏயார் கொடடோர் ஏ அபேசேகர (ஓய்வு) மற்றும் தேசிய ஸ்கொச் விளையாட்டுக் கழகத்தின செயலாளரான கட்டளைத் தளபதி டபிள்யூ எஸ் பி ஜயவர்தன (ஓய்வு) போன்றோர் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் 1906ஆம் ஆண்டு பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கொச் விளையாட்டானது 1981ஆம் ஆண்டு துறைசார் விளையாட்டாக ஆசிய விளையாட்டு அமைப்பின் கீழ் விளையாட்டு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த வகையில் ஆசிய ஸ்கொச் விளையாட்டுகளில் இலங்கை ஸ்கொச் விளையாட்டு ஆண் ,பெண் வீரர்கள் பங்கேற்பதுடன் 1991ஆம் ஆண்டு கொழும்பில் நிகழ்த்தப்பட்ட ஆசிய ஸ்கொச் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் பங்கேற்ற வீரர்கள் வெற்றியீட்டினர்.

இராணுவத் தலைமையக பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ மற்றும் முப்படையினர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Running sport media | Nike