Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2017ஆம் ஆண்டு கெரொம் போட்டியில் சிங்க படையணிக்கு வெற்றி

இலங்கை இராணுவ கெரொம் விளையாட்டு கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட The Inter Regiment Carrom Tournament – 2017 இப்போட்டி பனாகொடை இராணுவ சமிக்ஞை படையணியின் விளையாட்டரங்கத்தில் கடந்த செப்டெம்பர் 27,29ஆம் திகதிகளில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் 15 படையணிகள் பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியில் பங்குபற்றின.

மேலும் இந்த இறுதி போடடியில் விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (29) இடம் பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதான விருந்தினராக இலங்கை இராணுவ சேவைப்படையணியின் பணிபாளர் மேஜர் ஜெனரால் சாந்த லியனகே மற்றும்; இராணுவ கெரொம் விளையாட்டு கழகத்தின் அதிகாரி பிரிகேடியர் ரஞ்சித் தர்மசிரி, அவர்களும் கலந்து கொண்டன.

இதில் போட்டியிட்ட படையணிகளில் இலங்கை சிங்க படையணி முதலாவது இடத்தையும் இலங்கை இயந்திர படையணி மற்றும் விஜயபாகு படையணி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றது.

மகளிர் பிரிவில் 6 ஆவது மகளிர் படையணி முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டதுடன் 3ஆவது மகளிர் படையணிமற்றும்5ஆவது மகளிர் படையணி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றது.

இப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய 17ஆவது விஜயபாகு படையணியின் இராணுவ சாதாரன வீரர் எம்.ஜே.டி ரெஜினோல்ட் மற்றும் 6ஆவது மகளிர் படையணியின் இராணுவ வீராங்கனை ஈ.பி.என்.எம்.குணதாச சிறந்த வீளையாட்டு வீர வீராங்கனை ஆவர்.

இந்த போட்டியில் சிறந்த வீரராக 21 ஆவது சிங்க படையணியின் மேஜர் டி.சீ.எஸ்.கே அதுகொரல வெற்றியை தனதாக்கிகொண்டார்.

போட்டி இருதியில் தலைமை விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.

jordan release date | Nike sneakers