Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2020 08:06:40 Hours

121 ஆவது படைத் தலைமையகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவிற்குரிய 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவானது தலைமையகத்தில் இம் மாதம் (9) ஆம் திகதி இடம்பெற்றது.

படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான பிரிகேடியர் N.C சோமவீர அவர்களுக்கு ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைமையகத்தில் 18 ஆவது கெமுனு காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் கட்டளை தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பல் நிகழ்வுகளிலும் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Sneakers