Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2018 10:10:31 Hours

1 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் பாடசாலைக்கு உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 55, 552 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் யாழ் புத்தூரில் உள்ள மாதைகி பன்னசீக வித்தியாலத்திற்கு மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டன.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள தர்மா விஜய நிறுவனத்தின் அனுசரனையில் 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் நிர்மான பணிகளுடன் இந்த மலசலகூடம் நிர்மானிக்கப்பட்டு (3) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்து வைக்கப்பட்டது

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது எண்ணக் கருவிற்கமைய 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி தம்மிக ஜயரத்ன அவர்களில் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் 30 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பாடசாலை மலசலகூட திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை தளபதி வருகை தந்து ரிபன்களை வெட்டி திறந்து வைத்தார். அத்தருணத்தில் கோப்பாய் கல்வி வலய பணிப்பாளர், பாடசாலை அதிபர் இணைந்திருந்தனர். affiliate tracking url | Nike React Element 87