Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2019 14:51:27 Hours

‘செனகி சியபத்த’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாணவர்களுக்கு உதவிகள்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் நான்காவது கட்டமாக ‘செனகி சியபத்த’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இராணுவத்தினரது ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த தினங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் 4 ஆவது கட்டமாக ‘செனகி சியபத்த’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த 423 பிள்ளைகளுக்கு இராணுவத்தினரது உதவியுடன் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர்ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக் காட்டலின் கீழ் படைத் தளபதிகளின் தலைமையில் முல்லைத்தீவிலுள்ள மாங்குளம் வித்தியாலயம், பன்னங்கட்டி அரச கலவன் பாடசாலை, திருமுருகண்டி வித்தியாலயம் மற்றும் நாட்டாயிறு தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை இராணுவ மகளீர் படையணியின் ஒத்துழைப்புடன் 1000 பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Sneakers Store | adidas Yeezy Boost 350