Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

29th May 2019 14:23:33 Hours

‘எயார் மொபையில் படைத் தலைமையகத்தின் நடை பவனி

எயார் மொபையில் படைத் தலைமையகத்தின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு (ரணகாமி பாகமன) 53 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 310 கிலோ மீற்றர் தூரம் மதவாச்சி நகரத்திலிருந்து கொழும்பு வரையான 11 நாட்களுக்கான நடை பவனி இன்று காலை (29) ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நடைபவனியில் மதவாச்சியிலிருந்து இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி, 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன மற்றும் எயார் மொபையில் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் நிஷ்சங்க ஈரியகம மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் தேசிய மற்றும் படையணி கொடிகளை ஏந்திய வன்னம் படையினர் நடைபவனியில் கலந்து கொண்டனர்.

இராணுவ தளபதி இந்த நடைபவனியில் ஈடுபட்ட படையினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்குவிப்பளித்தார். இந்த முதல் நாள் நடை பவனியில் கலந்து கொண்ட இராணுவத்தினர் தங்களது நடைபவனியை அநுராதபுரத்தை வந்தடைவர்.

"இந்த படையாணியானது இலங்கை மக்களின் நலனுக்காக ஒரு சிறப்புப் பொறுப்பு வகிக்கின்ற ஒரு படைப்பிரிவாகும், அத்துடன் கொமாண்டோ மற்றும் விஷேட படையணிகளுடன் இணைந்து செயற்படக்கூடிய படையணியும், வன்முறை செயல்களிற்கு எதிராக செயல்படக்கூடிய படையணியாகும். இந்த படையணியின் வலிமை இந்த அணிவகுப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இராணுவத்தின் வலிமையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு நாடானது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மக்களை பாதுகாப்பதற்கு இராணுவம் முன்னுரிமை அளிப்பதாக இராணுவ தளபதி இந்த நடைபவனி நிகழ்வில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

இலங்கை இராணுவமானது நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் தேசத்தின் பாதுகாவலர்கள் இன, மத பேதங்களின்றி சமாதான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வதாக இந்த நடைபவனி செய்தியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.

எயார் மொபைல் படையணியின் அனைத்து பிரிவுகளிலும், பயிற்சிப் பாடசாலைகளிலும் இருந்து 729 படையினர்கள் இந்த நடை பவனியில் இணைந்து கொண்டனர். இவர்கள் இந்த நடைபவனிகளை அநுராதபுரம், ஹபரன, தம்புள்ளை, நாவுல, உகுவெல, மாத்தளை, கண்டி, கடுகன்னாவ, கேகாலை, பஷ்யாலை, நிட்டம்புவ, கடவத்த, பொறளை ஊடாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அடுத்த ஜீன் மாதம் 8 ஆம் திகதி வந்தடைவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அகுரனையிலுள்ள முஸ்லீம் பொது மக்கள் , மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இந்த நடைபவனியில் செல்லும் படையினர்களை இந்த பிரதேசங்களிலிருந்து வரவேற்பர்.

இந்த நடைபவனி இறுதி நாளாக கொழும்பு தெமட்டகொடையை வந்தடையும் சமயத்தில் இராணுவ தளபதியும் இந்த நடைபவனியில் இணைந்து கொண்டு டொரின்டன் சுதந்திர சதுக்கம் வரை சென்றடைவார்.

எயார் மொபைல் படையணி 1994 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி பிரிகேடியர் எச் எம் ஹலங்ஹொட (ஓய்வு) லெப்டினன்ட் கேர்ணல் தரத்திலிருக்கும் போது அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. எல்டிடிஈ பயங்கரவாதமானது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் தனித்துவமான நிலைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. அச்சமயத்தில் எயார் மொபைல் படையணி தங்களது விலைமதிப்பற்ற உயிர்களை, அவயங்களை இழந்து நாட்டின் சமாதானத்தின் நிமித்தம் தமது பாரிய அர்ப்பணிப்பை வழங்கியுள்ளது. அத்துடன் அவர்களது சிறப்பான பயிற்சி, புதிய மூலோபாய மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைகளை போர் நடவடிக்கைகளின் போது மேற்கொண்டனர்.