Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2018 18:25:59 Hours

‘எதிர்ப்பு எழுச்சி ஜங்கிள் வார்ஃபேர்’ பயிற்சியை மேற்கொள்ளும் அதிகாரிகள் முல்லைத்தீவு விஜயம்

மாதுரு ஓய இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி இல 23 இன் கீழ் எதிர்ப்பு எழுச்சி ஜங்கிள் வார்ஃபேர் பயிற்சி பெறும் இராணுவ அதிகாரிகள் முல்லைத்தீவிற்கு பயிற்சி கற்கைகள் நிமித்தம் டிசம்பர் மாதம் 9 – 11 ஆம் திகதி வரை விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தை மேற்கொண்ட அதிகாரிகளை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களை பிரதிநிதித்துவபடுத்தி 591 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி வரவேற்றார்.

பின்னர் இவர்கள் 59 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 592 ஆவது படைத் தலைமையகத்திற்கு வருகையை மேற்கொண்டனர். அச்சமயத்தில் இந்த அதிகாரிகளுக்கு 59 ஆவது படைப் பிரிவின் கடமை செயற் பொறுப்புக்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

அதன் பின்னர் வடுகாவல் பிரதேசத்தில் அமைந்துள்ள 11 ஆவது இராணுவ பொறியியல் படையணிக்கு சென்று இவர்களது கற்கை நெறிகளுக்க தொடர்பான அறிவினை பெற்றுக் கொண்டனர்.

இறுதியில் இவர்கள் 64 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்டனர்’ அச்சமயத்தில் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களினால் இவர்களுக்கு விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. trace affiliate link | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5