Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

ஸ்கொஷ் போட்டியில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகள் வெற்றி

இராணுவ ஸ்கொஷ் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு படைத் தலைமைகளுக்கிடையிலான ஸ்கொஷ் போட்டியானது, பெப்ரவரி 21 முதல் 24ஆம் திகதி வரை பனாகொடை இராணுவ உடற்பயிற்சி பயிற்றுவிப்பு பாடசாலையின் ஸ்கொஷ் அரங்கில் இடம் பெற்றது.

இப் போட்டிகள் பிரதி பாதுகாப்பு தலைமப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவின் கீழ் ,இலங்கை இராணுவ அதிகாரிகளிடையே இவ் விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்டது.

குழுபோட்டிகள் மற்றும் தனிப்போட்டிகள் என இரு பிரிவுகளாக இப் போட்டிகள் இடம் பெற்றதோடு, அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல அணிகளானது குழுபோட்டிகளில் பங்குபற்றின. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகங்களைச் சேர்ந்த இரண்டு அணிகள் தனிப்போட்டிகளில் பங்குபற்றின. இத் தனிப்போட்டிகளில் வெவ்வேறு தரத்திலான (மேஜர் ஜெனரல் / பிரிகேடியர்/கேர்ணல்/ லெப்டினன்/ லெப்டின்ன் கேர்ணல்/மேஜர் / கெப்டன் /லெப்டினன் /இரண்டாம் நிலை லெப்டினன் மற்றும் மகளிர் அதிகாரிகள் போட்டியிட்டனர்.

மேஜர் ஜெனரல்/ பிரிகேடியர் தரத்திலான அதிகாரிகளுக்கான போட்டிகளில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக அணியின் குழு தலைவர் மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்கள் இறுதிச் சுற்றுப் போட்டியில் பிரிகேடியர் பிரதீப் குணவர்தன அவர்களுடன் போட்டியிட்டு முதல் இடத்தைப் பெற்றதோடு பிரிகேடியர் பிரதீப் குணவர்தன அவர்கள் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

பிரிகேடியர் மஹேஷ் அபேரத்ன, இலங்கை படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த லெப்டினன் கேணல் கமிந்த சில்வா, இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் சந்திக சந்திராஜித், கெப்டன் அசங்க சமரவீர, லெப்டினன் எரங்க லியனகமகே மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த லெப்டினன் ஹசினி அபேரத்ன உள்ளிட்ட மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக குழு 2 ஆனது சம்பியன்ஷிப்பினை தனதாக்கிக் கொண்டது.மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகள் முறையே 2ஆவது மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டன.

இராணுவ ஸ்கொஷ் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் பிரதீப் குணவர்தன அவர்களின் அழைப்பினை ஏற்று இப் பேட்டியின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார். best Running shoes | Nike Shoes