Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2019 20:24:54 Hours

விஷேட காலாட்படை பயிற்சி நெறி நிறைவு நிகழ்;வு

மாதுறு ஓய இராணுவ பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற இல-67 விஷேட காலாட்;படை பயிற்சி நெறி முடிவின் வெளியேற்ற நிகழ்வானது, கடந்த சனிக் கிழமை 10 ஆம் திகதி நடைபெற்றது.

இராணுவ பயிற்சி கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல அவர்கள் நிகழ்சியின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இராணுவ பயிற்சி கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளரான லெப்டினன் கேணல் கே.ஏ. புஸ்பகுமார அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

மேலும், இல-67 விஷேட காலாட்படை பயிற்சி நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 16 அதிகாரிகள் மற்றும் 269 படைவீரர்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

24 ஆவது காலாட் படையணியைச் சேர்ந்த லெப்டினன் டி.டி.பி. விஜேசேகர அவர்கள் பயிற்சி நெறியின் சகல துறை சிறந்த அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டதோடு, 23 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் இ.எம்.எஸ்.; எதிரிசிங்க பயிற்சி நெறியின் சகல துறை சிறந்த படை வீரராக தெரிவு செய்யப்பட்டார். சிறந்த துப்பா;க்கி சூட்டு வீரராக 1சிங்கப் படையணியைச் சேர்ந்த லெப்டினன் டி.எஸ். போகஹவத்த தெரிவு செய்யப்பட்டதோடு, விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த வீரர்கள், இல-67 விஷேட காலாட் பயிற்சி நெறியின் சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இவ் பரிசளிப்பு விழாவில் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Sports Shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092