Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2018 11:30:42 Hours

விஜயபாகு காலாட் படையணியின் வர்ண இரவுகள் போயகனேயில் இடம் பெற்றது

விஜயபாகு காலாட் படையணியின் விளையாட்டு வீரர்களது மற்றும் அங்கவீனமுற்ற விளையாட்டு வீரர்களது சேவையைப்பாராட்டும் நோக்கில் இம் மாதம் 13ஆம் திகதியன்று மாலை வேளை இடம் பெற்றது.

அந்த வகையில் இவ் விஜயபாகு காலாட் படையணியின் வர்ண இரவூகள் நிகழ்வானது கடந்த சனிக் கிழமை (13) குருணாகலை போயகனே விஜயபாகு காலாட் படையணித் தலைமைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் (SLAVF) நிகழ்வுகள் இராணுவ விதிமுறைகளுக்கமைவாகவும் கேளிக்கை வினோதமாகவும் இடம் பெற்றது.

இவ்வாறு வருகை தந்த பிரதம அதிதியவர்களை விஜயபாகு காலாட் படையணியின் கேர்ணல் கெமடாண்ட் மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வரவேற்றதோடு இந் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் நாட்டிற்காக போரிட்டு உயிர் நீத்த படை வீரர்களை நினைவூ கூறும் நோக்கில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் விஜயபாகு காலாட் படையணி கீதம் இசைக்கப்பட்டதுடன் ; மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.

மேலும் இந் நிகழ்வூகளில் கலைதேர்ந்த கலைஞர்களால் கலாச்சார இசை மற்றும் வரலாற்று கருப்பொருள்களின் பல கண் கவரும் நிகழ்வூகள் இடம் பெற்றதுடன் விஜயபாகு காலாட் படையணியின் 246 அதிகாரிகள் மற்றும் சாதாரன படையினர் (சேவையாற்றும் மற்றும் அங்கவீனமுற்ற) விiயாட்டுத் துரையில் சர்வசேத ரீதியில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம்;; தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் இவ் விஜயபாகு காலாட் படையணியின் நிகழ்வூகளில் தலைசிறந்த வீரர்கள் 214.2015 மற்றம் 20016ஆம் ஆண்டுகளில் சர்வதேச ரீதியில் இராணுவ மட்டத்தில் மற்றும் பாதுகாப்பு சேவை மட்டங்களில் வெற்றியீட்டிய வீரர்களும் உள்ளடங்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வுகளில் இராணுவ சேவை மேம்படுத்தல் பணிப்பகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சந்தன குணவர்தன . விஜயபாகு காலாட் படையணியின் கேர்ணல் கெமடான்ட் மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன . இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின போன்றௌர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதியவர்களின் இறுதி உரையாற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டதுடன் கடந்த ஐந்து வருடங்களில் தமது திறமைகளை வெளிக்காட்டிய விஜயபாகு காலாட் படையணியின் வீரர்களும் காணப்பட்டனர்.

இவ் வர்ண இரவூகள் நிகழ்வில் விளையாட்டுத் துரையில் திறமை பெற்ற 246 விஜயபாகு காலாட் படையணியினரில் 107 விஜயபாகு காலாட் படையணியினர் தமது அளப்பறிய திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இந் நிகழ்வுகளின் இறுதியில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் 107 விளையாட்டு வீரர்களையூம் பாராட்டியதுடன் சிறந்த விளையாட்டு வீரருக்கான சின்னம் சார்ஜன்ட் எச் கே சி எஸ் ஹெட்டியாராச்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் சென்டர் கெமடாண்ட் பிரிகேடியர் ஸ்ரீநாத் ஆரியசிங்க அவர்களால் பேண்ட் வாத்திய இசைக் குழுவினருக்கு நன்றிகளை தெரிவத்து நன்றியூரை நிகழ்த்தப்பட்டதோடு தேசிய கீதமும் இறுதியில் இசைக்கப்பட்டு இந் நிகழ்வு முடிவுற்றது.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் விஜயபாகு காலாட் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் சாதாரண படை வீரர்கள் போனறோர் கலந்து கொண்டனர்.

bridgemedia | Nike News