Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2019 10:02:23 Hours

வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு படையினரால் சுகாதார வசதிகள்

வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்ப நபர்கள் மூவருக்கு சுகாதார வசதி திட்டத்தின் கீழ் மலசலகூடங்கள் நிர்மானிப்பதற்கான உதவிகள் 611 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த கட்டிட நிர்மான பணிகளுக்கான அனுசரனைகள் ‘பௌத்த’ தொலைக் காட்சி நிறுவனம் வழங்கியிருந்தது. இந்த மலசலகூடங்களின் நிர்மான பணிகள் நிறைவு செய்து பயனாளிகளுக்கு இம் மாதம் (21) ஆம் திகதி லகேஷ்கம விமலரத்ன தேரரது தலைமையில் சமய அனுஷ்டான ஆசிர்வாத பூஜைகளின் பின்பு வழங்கி வைக்கப்பட்டன.

61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கெடகும்புர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 611 ஆவது படைத் தலைமையகத்தின் கண்காணிப்பின் கீழ் 17 ஆவது சிங்கப் படையணியினால் இந்த கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

பயனாளிகளுக்கு இவைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் மஹாசங்க தேரர், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், இந்து பக்தர்கள் மற்றும் சிவிலியன்கள் இணைந்திருந்தனர்.Running sneakers | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff