Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2017 16:01:34 Hours

வன துறை திணைக்களத்தின் வாகனத்தை மீட்ட இராணுவத்தினர்

கிளிநொச்சி ஊர்த்திபுரம் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வனதுறைக்கு செந்தமான வாகனம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (15) ஆம் திகதி யாழ்ப்பாணம் -கிளிநெச்சியின் பிரதான வீதியில் பாதிப்புக்குள்ளனது.இதை மீட்கும் பணியில் 66ஆவது பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 662 ஆவது படைப்பிரிவினர் மீட்கும்நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்த ஊர்த்திபுரம் பிரதேசத்தினரால் கொடுக்கப்பட்ட தகவலுக்கு அமைய, 662 ஆவது படைப்பிரிவின் 20ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரை விபத்து இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சில மணிநேரங்களில் படையினர் வாகனத்தை மீட்டெடுத்தனர்.

அதன்படி 66ஆவது பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் துமிந்த கெப்பிட்டிவலான அவர்களின் வேண்டுகோலுக்கு அமைவாக 662 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் சம்பிக ரணசிங்க அவர்களால் படையினரை விபத்து இடத்துக்கு வாகனத்தை மீட்கும்பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Running Sneakers Store | Nike Off-White