Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2018 14:23:42 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்ஆரம்பகால ‘குழந்தைப் பருவ அபிவிருத்தி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்' பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21 ஆவது படைப்பிரிவு வளாகத்தினுள் (03) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்ற ‘குழந்தைப் பருவ அபிவிருத்தி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்' தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வு இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன.

இதன் முதல் கட்டமாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா அவர்களது மேற்பார்வையில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 03 ஆம் திகதி இந்த செயலமர்வு இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினர், அநுராதபுர மாவட்ட பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் இப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசவாசிகள் 1000க்கு மேலானோர் கலந்து கொண்டனர்.

மேலும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இன்னொரு நிகழ்ச்சி திட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் 850 பேர் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வில் ஹேமாஸ் அவுட்ரீச் பவுண்டேஷனின் பொது முகாமையாளர் திருமதி சிரோமி மாசக்கோரால அவர்களினால் இந்த விரிவுரைகள் ஆற்றப்பட்டன.

உடல், அறிவாற்றல், மொழியியல், உணர்ச்சி, சமூக மற்றும் ஆன்மீக அம்சங்களை உள்ளடக்கிய குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி செயல்முறை ஓய்வுபெற்ற முன்னணி மற்றும் கல்வி உதவி முன்னாள் பணிப்பாளர் திரு சந்திரபால திஸாநாயக்கவினால் ஆற்றப்பட்டது.

இறுதியாக, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர, "சிறுவர் துஷ்பிரயோகம், தவறான சிகிச்சை மற்றும் சமூக ஊடகங்கள் / சமூக விரோத போக்குகள் ஆகியவற்றின் விளைவுகள்" பற்றிய மிக முக்கியமான விரிவுரையை இந்த செயலமர்வில் விரிவுரைகளை ஆற்றினார்.

அவற்றில் பல குற்றவியல் குணநலன்களை உயர்த்திக் காட்டிய அவர், அவர்களது ஆரம்பகால குழந்தை பருவத்தில் இதேபோல் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் குற்றவாளிகள் எனக் கூறினர். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சமுதாயத்தில் ஒழுக்க நெறிகளையும் நன்னெறிகளையும் புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த செயலமர்விற்கு பிரதம அதிதியாக 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கலகமகே அவர்கள் வருகை தந்து இந்த விரிவுரையாளர்களுக்கு நன்றியையும் ஆற்றினார்.

Best Sneakers | UK Trainer News & Releases