Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

வன்னி படையினர்களுக்கு இடம்பெற்ற “பூடோ” தற்பாதுகாப்பு பயிற்சி நிறைவு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த படையினர்களின் மனத் தைரியத்தை ஊக்குவிக்கும் முகமாக “கியோஷியு பூடோ” தற்பாதுகாப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ தளபதியின் ஆசிர்வாதத்துடன் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவில் இந்த தற்பாதுகாப்பு பயிற்சிகள் இராணுவத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த தற்பாதுகாப்பு பயிற்சிகள் ஆகஸ்ட் 01 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை வேலை நாட்கள் 15 நாட்களை உள்ளடக்கி இடம்பெற்றது.

“கியோஷியு பூடோ ” என்பது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் நன்கு அறியப்பட்ட தற்காப்பு கலைகளில் ஒன்றாகும். இந்த தற்காப்பு கலையானது ஜப்பானில் உள்ள தேசிய பொலிஸ் அமைப்பின் பாதாள உலக ஒழிப்பு பிரிவின் தலைவராக இருந்த, ‘தலைமை ஆசிரியர் (சோக்) ஹன்ஷி கியோஷி சாகாமோதோ” (கருப்புபட்டி 10ஆம் டன்) அவர்களினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“கியோஷிரியு பூடோ” என்பது ஒரு தற்காப்புக் கலை மட்டுமல்ல, அது முன்னோர்களால் ஒரு தற்காப்பு சண்டை முறையாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது மன அல்லது உடல் ரீதியான அடக்குமுறை போன்ற எந்தவொரு சவாலான சூழ்நிலையில் நிலையான மனநிலையுடன் ஒரு நபரைத் தக்கவைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கடினமான பணிகளை விலைமதிப்பற்ற, திறமையாக மற்றும் திறம்பட நிறைவேற்ற சிறந்த அறிவு மற்றும் சரியான பயிற்சி பெற்ற ஒருவரை இது வளமாக்கும். தன்னம்பிக்கையையும் வலிமையையும் பயன்படுத்தி அவசர சூழ்நிலைகளை நிர்வகிப்பது “கியோஷியு பூடோ” மூலம் உருவாகும் மற்றொரு முக்கிய காரணமாகும்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறுகிய காலத்தினுள் இந்த பயிற்சியானது படையினரின் தற்பாதுகாப்பிற்காகவும் அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படும் சமயங்களிலும் தங்களை பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 2000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு இந்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக 25 அதிகாரிகள் உட்பட 1000 படை வீரர்கள் இம் மாதம் (17) ஆம் திகதி இந்த பயிற்சிகளை நிறைவு செய்தனர்.

பாடநெறியின் முதன்மை பயிற்றுவிப்பாளராக இலங்கையில் உள்ள மூத்த தற்காப்பு கலை பயிற்றுநர்களில் ஒருவரான ரென்ஷி கிளெமென்ட் டி சொய்சா (கருப்பு பட்டி 8 வது டான்) நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதிவாய்ந்த இராணுவ பயிற்றுநர்கள் இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த பயிற்சிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை அதிகாரி 1 தரத்திலிருக்கும் லெப்டினன்ட் கேர்ணல் G.B.W.M.R.K.R பண்டார, பொது பதவிநிலை அதிகாரி 11 தரத்திலிருக்கும் மேஜர் S.U.B பிலிமந்தலாவ போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற படை வீரர்களுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வைத்து கௌரவித்தார்.

தலைமை பயிற்றுவிப்பாளர் ரென்ஷி கிளெமென்ட்டி சொய்சா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர்கள் குழுவினர்கள், 21, 54, 61 பிரிவுகளின் படைத் தளபதிகள், பிரிகேடியர்கள், கேர்ணல் J.B ரந்தெனிய, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Adidas shoes | Yeezy Boost 350 Trainers