Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2019 20:20:33 Hours

வன்னி படையினரால் ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு

ஸ்ரீ புர பிரதேசத்தில் உள்ள பதவிய நகரத்தில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு (09) ஆம் திகதி செவ்வாய்கிழமை வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கப்பட்டதுடன் பயனாளிக்கு வழங்கப்பட்டது.

ஸ்ரீ புர பிரதேசத்தில் உள்ள பதவிய நகரத்தில் வசிக்கும் திரு அஜித் பிரேமகுமார அவர்கள் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பொருளாதார தடைகள் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார். இவர்களின் இந்த நிலைமையை கருத்திற் கொண்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதி பொது பணிப்பாளர் கேணல் அனில் பீரிஸ் அவர்களின் முன் முயற்ச்சியால் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு லெஸ்லி சமன் மாரசிங்க அவர்களின் உதவியுடன் புது வீடு நிர்மாணித்து கொடுக்கும் பணியை மேற் கொண்டனர்.

இந்த நிர்மாண பணிகள் 62 ஆவது பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜே.எம்.யு.டி ஜயசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் 622 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேணல் எஸ்.பி.அமுனுகம அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினரால் மே மாதம் 02 அம் திகதி 2019 ஆரம்பிக்கப்பட்டு 70 நாட்களில் இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைந்;தன. இப் பணிகளுக்கு நன்கொடையாளர்கள் தனது தாராள மனப்பான்மைக்கு மேலதிகமாக பயனாளிக்கு அத்தியாவசிய வீட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் அழைப்பின் பேரில் நன்கொடையாளர் திரு லெஸ்லி சமன் மரசிங்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந் நிகழ்வில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 ஆவது பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜே.எம்.யு.டி ஜயசிங்க, 622 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேணல் எஸ்.பி.அமுனுகம, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதி பொது பணிப்பாளர் கேணல் அனில் பீரிஸ் மற்றும் 62 ஆவது படைப் பிரிவு மற்றும் 622 ஆவது படைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் வீடுகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு ஆர்வத்துடன் வழங்குவதில் இந்த ஆண்டுக்குள் ஏழு நிரந்தர வீடுகள் மெதவச்சி, புலேலிய, செலலிஹின;கமா, கணேஷபுரம், பம்பமடு மற்றும் வெலிஓயா போன்ற பகுதிகளில் வெவ்வேறு நன்கொடையாளர்களின் ஆதரவுடன் வீடுகள் நிர்மாணித்து கொடுத்துள்ளனர். இதுபோன்ற இன்னும் சில திட்டங்கள் மேலும் முன்னெடுத்துள்ளனர். Sports Shoes | nike