Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

12th July 2019 22:45:05 Hours

வன்னிப் படைத் தளபதி பொறியியல் பிரிக்கட் தலைமையகத்திற்கு விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பூ ஓயவிலுள்ள பொறியியல் பிரிக்கட் தலைமையகத்திற்கு இம் மாதம் (11) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த படைத் தளபதியை பொறியியல் பிரிக்கட் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் A. N அமரசேகர அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் வன்னி பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதியின் வருகையை நினைவு படுத்தி தலைமையக வளாகத்தினுள் மா மரநடுகையும் படைத் தளபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்களினால் படைத் தலைமையக வளாகத்தினுள் உள்ள படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டு பிரிக்கட் தலைமையகத்தில் அமைந்திருக்கும் அனைத்து பிரிவுகளையும் சென்று பார்வையிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்திருந்தனர்.