Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2018 12:53:15 Hours

யாழ்ப்பாண நலன்புரி மத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 படைப் பிரிவு மற்றும் 521 ஆவது படைத் தலைமையகம் இணைந்து மனுதாபிமான நடவடிக்கைகளில் சிவில் நபர்களது அனுசரனையுடன் யாழ்ப்பாண நலன்புரி நிலையத்தில் 25 பாடசாலை மாணவர்களுக்குபாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது ஆலோசனைக்கமைய 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் யோகபுரம் மற்றும் செல்வபுரம் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் சார்பாக சனிக் கிழமை (24) ஆம் திகதி இந்த நன்கொடைகள் அன்பளிக்கப்பட்டன.

ஒவ்வொருவருக்கு 5000 ரூபாய் பெறுமதியான பரிசுப் பொதிகள் துஷித பெர்ணாந்து அவர்களது அனுசரனையில் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நன்கொடை நிகழ்வுகளில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன. இந்த நன்கொடைகளை கௌரவித்து இராணுவத்துனருக்கு பாடசாலை நிரிவாகத்தினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே பாடசாலை நிர்வாகத்தினால் வரவேற்கப்பட்டார். பின்பு மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்று பாடசாலை அதிபரினால் வரவேற்புரை இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளுக்கான பணிகள் 521 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி சுஜீவ ஹெட்டியாரச்சி அவர்களது கண்காணிப்பின் கீழ் 22 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் லலித் சமரகோன் அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

jordan Sneakers | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov