Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2018 17:26:54 Hours

முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்த கால்பந்து போட்டிகள்

முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68ஆவது படைப்பரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அப்பிரதேச இளைஞர்களுக்கு இடையிலான இறுதிச் கால்பந்து சுற்றுப் போட்டிகள் புதுகுடியிறுப்பு பிரதேச விளையாட்டு மைதானத்தில் கடந்த (24) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைப்பெற்றது.

முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக்கருவிற்கு அமைய 68ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெணார்ந்து அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

இந்த போட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை உடுப்புக்குளம் ஆலையோசை விளையாட்ட கழகம் மற்றும் இரணபாலை சென் அந்தனிஸ் விளையாட்டு கழகம் போன்றவற்றில் இடம் பெற்றதோடு இப்போட்டிகளில் இரணபாலை சென் அந்தநிஸ் விளையாட்டு கழகம் 1-0 என்ற புள்ளி வீதத்தில் வெற்றியை தனதாக்கி கொண்டது.

இப் போட்டிகளில் உடுப்புக்குளம் ஆலையோசை விளையாட்ட கழகம் இரண்டாம் இடத்தை பெற்றது அந்த வகையில் இரணபாலை சென் அந்தனிஸ் விளையாட்டு கழகத்தின் திரு அரோசன் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை லார்ஸ் கோப்பல் ஜகத் குமார பெற்றுக் கொண்டார்.

சிறந்த பந்து காப்பாளர்களுக்கான விருதுகளை ஆலையோசை விளையாட்ட கழகத்தின் திரு கந்தருபன் மற்றும் சென் அந்தனிஸ் விளையாட்டு கழகத்தின் திரு ஏ எஸ் அமோஜிதன் போன்றோர் பெற்றுக் கொண்டனர்.

கூடுதலாக வென்ற அணிக்கு ரூ ரூ 25,000 / =, ரூ 20,000 / = ரூமற்றும் 15,000 / = ஆகியவற்றிற்கான வென்ற அணிக்கு 8 சோடி கால்பந்து காலணிகள் பரிசுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

நன்கொடையாளர்களால் 68 படைப் பிரிவினால் நடாத்திய போட்டிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோப்பைகளும் விளையாட்டு-ஆடைகள், பரிசுகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு எஸ். எஸ். பிரதீபன் படைப்பிரிவின் தளபதிகளும் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

short url link | Nike sneakers