Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2020 17:00:59 Hours

மாலைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வெடிபொருள் அகற்றல் தொடர்பான பயிற்சி

மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வெடிகுண்டு அகற்றும் படையினருக்கான இரண்டாம் கட்ட விசேட பயிற்சிகள் திறமை மிக்க இலங்கை இராணுவ விசேட வெடிகுண்டு அகற்றும் படையினரால் மாலைதீவில் ஞாயிற்றுக் கிழமை (5) இடம் பெற்றது.

அந்த வகையில் இலங்கை இராணுவ விசேட வெடிகுண்டு அகற்றும் படையினர் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வெடிகுண்டு அகற்றும் படையினருக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களை பயிற்றுவிக்கும் நோக்கில் மாலைதீவிற்கான விஜயத்தை மேற்கொண்தோடு இப் பயிற்சிகளில் வெடிகுண்டுகளை கையாளும் முறைகள் மற்றும் வெடிகுண்டு மீட்டல் போன்ற விடயங்கள் இதன் போது விளக்கப்பட்டன.

அந்த வகையில் இவ் ஆறுமாத காலப் பகுதியில் வெடிகுண்டு அகற்றம் உத்திகள் போன்றன தொடர்பாக விபரிக்கப்பட்டன. இதன் போது ஐஈடீ செயற்பாடுகள் தொடர்பாக விளக்கப்பட்டன. இதற்போது பயிற்சிகள் மற்றும் இவற்றின் செயல்முறைகள் போன்ற விடயங்களும் இப் படையினருக்கு விளக்கப்பட்டது. இப் பயிற்சிகளில் ஒரு அதிகாரி உள்ளடங்களாக உயர் அதிகாரிகள் இருபத்தொரு படையினர்கள் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சிகள் காதூல் லாமு எனும் பிரதேசத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றதுடன் இந் நிகழ்வில் மாலைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான அதிகாரியான கேர்ணல் இப்ராஹீம் ஹில்மி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் இலங்கை இராணுவத்தினரின் திறமைகளை பாராட்டினார்;.

மேலும் அவர் தமது மனமார்ந்த நன்றிகளை இலங்கை பொறியியல் படையணியின் தளபதியவர்களுக்கான நன்றிகளைத் தெரிவித்தார்.

இப் பயிற்சிகள் 2020 பெப்ரவரி 18ஆம் திகதி நிறைவடைந்ததுடன் இதில் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். jordan release date | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ