Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2019 15:51:10 Hours

போர் பயிற்சி நிலையத்திற்கு புதிய தளபதி நியமிப்பு

இலங்கை இராணுவ போர் பயிற்சி நிலையத்திற்கு 39 ஆவது புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் விகும் லியனகே அவர்கள் இம் மாதம் (6) ஆம் திகதி அம்பாறையிலுள்ள பயிற்சி தலைமையகத்தில் தனது புதிய பதவியை உத்தியோக பூர்வமாக பாரமேற்றார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

பின்னர் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொண்டு அதன் பின்னர் படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

இறுதியில் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இவர் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy shoes | Air Jordan