Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2020 22:35:26 Hours

பொறியியல் சேவைப் படையணியின் 70ஆவது ஆண்டு விழா

பனாகொடையில் உள்ள இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இதற்கான நிகழ்வுகள் 10 முதல் 11ஆம் திகதி வரை இடம் பெற்றது.

அந்த வகையில் வெள்ளிக் கிழமை (10) இப் படைத் தலைமையகத்தில் இப் படையணியின் கேர்ணல் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஆர் கணேகொட அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வுகளின் போது இவ் அதிகாரியவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் இவ் அதிகாரியவர்கள் கேர்ணல் கே எம் எஸ் குமார அவர்கள் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இப் படையணித் தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்தில் உள்ள படையினரது நினைவுத் தூபிக்கான அஞ்சலியை செலுத்தினார்.

அதற்கமைய இத் தளபதியவர்களின் தலைமையில் அனைத்து படையினருடனான குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அத்துடன் இப் படைத் தலைமையக ஆண்டு விழவை முன்னிட்டு இன்னிசை நிகழ்சிகளும் இடம் பெற்றன.

இறுதியான இப் படையணி தளபதியவர்களின் தலைமையில் விளையாட்டு மற்றும் பல போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்;ந்து அனைத்து படையினருடனான மதிய உணவு விருந்துபசார நிகழ்வும் இடம் பெற்றது.

மாலை நேர இன்னிசை நிகழ்வும் (11) திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் 70ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர். Sneakers Store | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth