Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2020 19:08:26 Hours

புதிய நியமனத்திற்காக பதவி துறந்தார் கிழக்கு தளபதி

இராணுவத் தலைமையகத்தில் ஒரு புதிய நியமனத்தை விரைவில் ஏற்றுக் கொள்வதற்காக கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிகா பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை 31 திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி பதவியினை கைவிட்டார்.

வெளிகந்தை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் ரசிகா பெர்னாண்டோ மே 28-30 காலப்பகுதியில் படைப்பிரிவுகள் மற்றும் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளம் ஆகியவற்றிக்கு மரியாதைக்குரிய விஜயங்களை மேற்கொண்டார்.

கிழக்கு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ வியாழக்கிழமை 28ம் திகதி 22 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்து அதிகாரிகள் மற்றும் படையினரை சந்தித்தார். மறுநாள் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளத்திற்கும், 30ம் திகதி சனிக்கிழமை 24 வது பிரிவு தலைமையகத்திற்கும் விஜயம் செய்தார். இதன் போது அனைத்து படைப்பிரிவுகளின் தளபதிகள், கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளத் தளபதி ஆசியோரால் வரவேற்கப்பட்டார்.தொடர்ந்து படையினருக்கு உரையாற்றும் போது அனைத்து நிலையினர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டியதோடு எதிர்காலத்தலும் தங்கள் சேவைகளை திறம்பட செய்வதற்கு அவர்களை ஊக்குவித்தார்.

இன்று 31ம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய ரீதியிலான அணிநடை மரியாதையினை 06 வது கஜபா படையணி வழங்கியது. கொவிட் 19 தொற்று நோயிற்கான சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நிகழ்வு இடம்பெற்றது.

தளபதியின் பிரியாவிடை உரையில் தனது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்காக அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினருக்கு நன்றி தெரிவித்தார். இராணுவ மரபுகளுக்கு இணங்க அவர் செய்த சேவைகளைப் பாராட்டி நினைவு பரிசினை பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வசதி வழங்கல் பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க ஆகியோர் வழங்கி வைத்தனர்.

அவர் கிழக்கு படைத் தலைமையக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் வாழ்த்துக்களையும் மறக்க முடியா நினைவுகளையும் பதிவிட்டார். Running Sneakers | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp