Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2018 16:21:52 Hours

புதிய சைபர் தொழிழ்நுட்பக் கண்காட்சி கிழக்கில் ஆரம்பம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும்; சைபர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இணைந்து நடாத்திய கிழக்கின் சைபர் தொழிற்நுட்டம் - 2018 எனும் தலைப்பில் அமையப்பெற்ற கண்காட்சியானது ஆகஸ்ட் மாதம் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மேலதிக தொழிழ்நுட்ப பயிற்ச்சி நிலையத்தில் இடம் பெற்றது.

இராணுவத்தினர் மற்றும் சிவில் மக்கள் இணைந்து நாடத்திய இச் சைபர் தொழில்நுட்ப கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகள் கணினி கருவிகள் மற்றும் உபகரணங்கள் மின்சார மற்றும் லைட்டிங் வீட்டு மற்றும் தொழில்துறை கருவிகள் மின்னணு கேஜெட்டுகள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு பாரிய அளவிலான மக்கள் இக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் கலந்து இக் கண்காட்சி நிகழ்வை திறந்து வைத்ததுடன் பலவாறான உயர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் உயர் கல்வி அமைச்சு மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் இடம் பெற்ற இக் கண்காட்சியானது இராணுவம் மற்றும் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை சம்மாந்துரை போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள மேலதிக தொழிழ்நுட்ப பயிற்ச்சி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கியத்துவம் வாய்ந்த கண்காட்சியாக காணப்பட்டது.

இக் கண்காட்சியானது நிர்வாக மற்றும் வணிகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகமான திரு கீர்த்தி குமார நவரத்தின அவர்களின் கண்காணிப்பின் கீழ் இலங்கை மேலதிக தொழில்நுட்ப மையத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்கள் மற்றும் 40 காட்சிப்படுத்தினர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது. Adidas footwear | Asics Onitsuka Tiger