Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2017 08:49:12 Hours

புதிய சமுர்த்தி உத்தியோகத்தர்களது தலைமைத்துவ பயிற்சிப் பாடநெறியைப் அமைச்சர் பார்வையிட்டார்

சமூகப் பதவி, நல்வாழ்வு மற்றும் கண்டி கனரக அமைச்சின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் பாதுகாப்பு பயிற்சிப் பாடநெறி இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சமீபத்தில் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டன.

நலன்புரி மற்றும் கண்டி கௌரவ அமைச்சர் எஸ்.பீ திசாநாயக அவர்களின் வழிக்காட்டலின் கீழ்இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஏற்பாட்டில்இராணுவத் தொழிற்பயிற்சி நிலையத்தின் (CAVT) ஒத்துழைப்புடன் சமுர்த்தி அதிகாரிகளை அறிவுறுத்தும் பயிற்சிநெறிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த பயிற்சிநெறிகள் 19 நாட்களை உள்ளடக்கியிருந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 1904 பேருக்கு இராணுவத்தினரால் இந்த பயிற்சிகள்ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

இவற்றில் 1521 பெண் உத்தியோகத்தர்கள் உள்ளடங்குவார்கள்.

இவர்களுக்கு'தலைமையியல், நேர்மறையான அணுகுமுறைகள் மற்றும் ஒழுக்க அபிவிருத்திதொடர்பான அறிவுறுத்தல்கள் இந்த பயிற்ச்சிநெறியின் ஊடாக வழங்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சின் சமூக ஆற்றல், நலன்புரி மற்றும் கண்டி மரபு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவ தளபதிலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களது மேற்பார்வையில்இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களினால் இந்த பயிற்சிநெறிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

தலைமைத்துவ பயிற்சிகள் தியதலாவை இராணுவ தொண்டர் பயிற்சி பாடசாலை (VFTS)மின்னேரியகாலாட்படை பயிற்சி பாடசாலை(CTS), அம்பாறை இராணுவ பயிற்சி பாடசாலை மின்னேரிய காலாட் படையணிபயிற்சி பாடசாலை (சி.டி.எஸ்), மின்னேரிய, கம்பட் பயிற்சி பாடசலை (சி.டி.எஸ்), மின்னேரியஇலங்கை பீரங்கி பயிற்சி பாடசாலை (SLA), எம்பிலிப்பிட்டி பொறியாளர் பயிற்சி பாடசாலைபுவேலிகட சமிக்ஞை பயிற்சி பாடசாலை, அம்பேபுஸ்ஸ சிங்கப் படையணி பயிற்சி பாடசாலை தொம்பகொட இராணுவ போர்கருவி பயிற்சி பாடசாலை ,குட்டிகலஇலங்கை இராணுவ பொது சேவைப் பயிற்சிப் பாடசாலை, புத்தளம்விஜயபாகு காலாட்படை படையணியின் பயிற்சி பாடசாலை, மதவாச்சி 4 ஆவது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி பயிற்சி பாடசாலை,தெஹியத்தகந்திய 3ஆவது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி பயிற்சி பாடசாலையில், இராணுவ பயிற்சி பணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பயிற்சிநெறிகள் இடம்பெற்றது.

இந்த திட்டம், 1/3 அர்ப்பணிப்புடன், இராணுவ நிர்வாகத்தை ஆதரிக்கும் நோக்கில், எந்த வகையிலும் கடமைகளை வழிநடத்திஅர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் என்ற தலைப்பில் இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

பல சமுதாய சமூகங்கள் வாழும் நாட்டிலுள்ள பல்வேறு இடங்களுக்கு இவர்கள் கடமைகளுக்கு அனுப்பப்படுவதால், ஆளுமை, தலைமை மற்றும் முறையான நடத்தை தொடர்பான அறிவை புதிய சமுர்த்தி அதிகாரிகள் மேம்படுத்த இராணுவத்தினரால் இந்த பயிற்சிநெறிகள் 2017 டிசம்பர் 9 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக இடம்பெறும்.

இந்த பயிற்சி நெறிளை பார்வையிட வந்த அமைச்சர் மற்றும் இராணுவ பயிற்சி பணிப்பாளர்களுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உரையாடினார்கள்பின்பு இவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இராணுவ சாலியவெவ பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரந்துல ஹத்னாகொட, கௌரவ அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் சுனில் குனவர்தன லெப்டினன்ட் கேணல் சஷிக பெரேரா இராணுவ மூத்தஅதிகாரிகள் மற்றும் பல மூத்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Running Sneakers | Nike Air Max 270