11th September 2018 18:43:34 Hours
மத்தேகொட இராணுவ பொறியியலாளர் தலைமையகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ பொறியியலாளர் பிரதானி மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ் அவர்கள் தனது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக ஒக்டோபர் மாதம் (15) ஆம் திகதி பொறுப்பேற்றார்.
புதிய பிரதானிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து சமய ஆசிர்வாத பூஜைகளின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார். அத்தருணத்தில் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டு படையினருடன் உரையாடலை மேற்கொண்டார்.
முன்னாள் இருந்த இராணுவ பொறியியலாளர் பிரதானி மேஜர் ஜெனரல் டட்லி வீரமன் அவர்களின் இடமாற்றத்தின் பின்பு புதிய இராணுவ பொறியியலாளர் பிரதானியாக மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். spy offers | adidas garwen spezial white shoes - New In Shoes for Men