Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2020 12:21:32 Hours

பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு படையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 130 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது கல்வடுகம வித்தியாலயத்தில் கொழும்பிலுள்ளராஜா ஜூவலர்ஸ் தனியார் தொழில் ஸ்தாபனத்தின் பொது முகாமையாளர் திரு அதுல எலியபுர அவர்களது அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டன.

சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களது எண்ணக் கருவிற்கமைய 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வன்னியில் பின் தங்கிய பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம், கடந்த சில வாரங்களில் பள்ளியுடன் கலந்தாலோசித்து சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படியான பள்ளிகளின் விபரங்களை தேர்ந்தெடுத்து இதற்கு முன்பும் ஐந்து தடவை பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த நிகழ்வானது கேர்ணல் அனில் பீரிஸ், 7 ஆவது படைக்கலச் சிறப்பணியின் கட்டளை அதிகாரி, 212 ஆவது படைத் தலைமையகத்தின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்களது பங்களிப்புடன் கல்வடுவகம வித்தியாலயத்தில் இடம்பெற்றன. best Running shoes brand | Zapatillas de running Nike - Mujer