Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2019 20:01:10 Hours

பாதுகாப்பு படைத் தலைமையகங்களினால் பிரதான நகரங்களில் இடம்பெற்ற நடைபவனி

நாடாளவியல் ரீதியாக பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட ‘தேசவர்ஷாபிஷேக’ நடைபவனி இம் மாதம் (22) ஆம் திகதி காலை இடம்பெற்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மஹரகம ப்ரசிடன் கல்லூரி, பன்னிப்பிடிய தர்மபால கல்லூரி வளாகத்தினுள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடைபவனி இடம்பெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது தலைமையில் வன்னி தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் (20) ஆம் திகதி இராணுவ ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வானது இராணுவ படையணிகளது கொடிகள் ஏற்றப்பட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் இடம்பெற்றது.

மேலும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பம்பைமடு திரேஷா பராமரிப்பு நிலையத்தில் இம் மாதம் (17) ஆம் திகதி இராணுவத்தினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க மற்றும் கேர்ணல் இந்து சமரகோன் போன்ற அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது தலைமையில் முல்லைத்தீவு நகரத்தில் 143 இராணுவ அதிகாரிகள் மற்றும் 772 படை வீரர்களது பங்களிப்புடன் இராணுவ நடைபவானி இடம்பெற்றது. அத்துடன் முள்ளிவைக்கால் ஞாபகார்த்த நினைவு தூபியில் இம் மாதம் (19) ஆம் திகதி விளக்குகள் ஏற்றி நிகழ்வுகளும் இடமபெற்றது.

இச்சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு பாதுகாப்பு படையைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி வி ரவிப்பிரிய மற்றும் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளது பங்களிப்புடன் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் தேசிய ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

ரணவிரு சேவா அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்தினுள் இம் மாதம் (20) ஆம் திகதி முப்படையினர் மற்றும் பொலிஸாரினது பங்களிப்புடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் படை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் மதிப்புக்குரிய கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வருகை தந்தார் அத்துடன் அதிதிகளாக யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்திய தூதரக ஜெனரல் திரு எஸ் பாலசந்திரன், வடமாகாண பிரதான செயலாளர் திரு ஏ பத்திநாதன், யாழ் மாவட்ட செயலாளர் திரு என் வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபாவதி கேதிஸ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர் எஸ் மோகனராசா, வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் திரு திரேஷ் குமார், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி வி ரவிப்பிரிய, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தை பிரதிநிதித்துவபடுத்தி பிரிகேடியர் டப்ள்யூ டீ சி கே கொஷ்தா, வடக்கு கடற்படை பிராந்திய தளபதி கொமடோர் எஸ் டீ சேனாரத்ன, பலாலி விமானப்படை முகாமின் கட்டளை தளபதி குரூப் கெப்டன் எஸ் டீ ஜயவீர, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம் பீ ரஞ்ஜித் போன்றோர் வருகை தந்து உயிர் நீத்த படை வீரர்களை கௌரவித்து நினைவு தூபிகளுக்கு அஞ்சலியும் செலுத்தினார்கள்.

இந்த நிகழ்விற்கு அரச உயரதிகாரிகள், முப்படை உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் தலைமையில் யாழ் துறையப்பா மைதானத்தில் இம் மாதம் (22) ஆம் திகதி பெரும்பாலான இராணுவத்தினரது பங்களிப்புடன் இராணுவ நடைபவனி இடம்பெற்றது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது பங்களிப்புடன் 11, 12 படைப் பிரிவின் படைத் தளபதிகளின் பங்களிப்புடன் கண்டி நகரத்தில் இராணுவ நடைபவனி இம் மாதம் (22) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் எஸ் எம் எஸ் பி பீ சமரகோன் அவர்களது பூரண ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களது தலைமையில் பொலன்னறுவையிலுள்ள தொப்பாவெவ மத்திய கல்லூரி வளாகத்தினுள் இராணுவ நடைபவனி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நடை பவனியில் 153 இராணுவ அதிகாரிகளும், 1403 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்வுகள் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக அவர்களது பூரண ஏற்பாட்டுடன் இடம்பெற்றது. Nike footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ