Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th July 2018 07:44:30 Hours

பாதுகாப்பு சேவை நீச்சல் போட்டியில் இராணுவத்தினர் சம்பியனாக தேர்வு

பாதுகாப்பு சேவை 2018 ஆம் ஆண்டிற்கான ஆண், பெண் நீச்சல் போட்டிகளில் இலங்கை இராணுவத்தினர் பங்கேற்றுக் கொண்டு சம்பியன்களாக (6) ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவ நீச்சல் ஆண் அணியினர் 18 தங்கப் பதக்கங்களையும், 11 வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். இராணுவ பெண் அணியினர் 12 தங்கப் பதக்கங்களையும், 6 வெள்ளிப் பதக்கங்களையும் இந்த போட்டிகளில் பெற்றுக் கொண்டனர்.

இந்தபோட்டிகள் இரத்மலானையில் உள்ள விமானப்படை நீச்சல் தடாக உள்ளரங்கில் ஜூலை மாதம் 5 – 6 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இலங்கை இராணுவ நீச்சல் மற்றும் நீர் பந்து சங்கத்தின் தலைவர் மற்றும் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன இந்த போட்டியாளர்கள் திறமையாக செயற்படுவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளார்.

Nike air jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer