Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2017 19:38:47 Hours

பாதுகாப்பு கருத்தரங்கின் பேச்சாளரான அமெரிக்க அட்மிரல் கெயிநோட் இராணுவ தளபதியை சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான அட்மிரல் வில்லியம் ஜே போலன் 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட இக்காலகட்டத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை (28)ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச ஞாகபார்த்த மகாநாட்டு மண்டபத்தின் விஷேட பிரமுகர்கள் சாலையில் சந்தித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

இவ்விருவரது சந்திப்பின் போது நாட்டின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு முக்கிய விடயம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கை இராணுவ தளபதிக்கு கருத்தரங்கு தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்பு இராணுவ தளபதியினால் இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்ததையிட்டு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை இந்த அதிகாரிக்கு தெரிவித்தார்.

Nike footwear | Nike Running