Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2017 23:44:29 Hours

பயிற்சிப் பாடசாலை தலைமையகங்களில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வூகள்

நாடளாவிய ரீதியில் காணப்படும் படைத் தலைமையகங்கள் படைப்பிரிவூகள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகளில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம் பெற்ற வெசாக் நிகழ்வூகளின் தொகுப்பு பின்வருமாறு.

53வது படைத் தலைமையகம்

53வது படைத்தலைமையகத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ரொஷான் ராஜகுரு அவர்களின் தலைமையில் தம்புள்ள பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள இப் படைத் தலைமையகத்தில் வெசாக் நிகழ்வுகள் மிகவிமரிசையாக இடம் பெற்றது.

54வது படைத்தலைமையகம்

வன்னிப் படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் மன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள 54 வது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் ஏனைய படைப் பிரிவினர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வுகள் மன்னாரை அன்மித்த பிரதேசங்களில் மிககோலாகலமாக இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 54 வது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த செனவிரத்ன கலந்துகொண்டார்.

55 வது படைத் தலைமையகம்

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 வது படைத் தலைமையகத்தின் படைப் பிரிவினரால் கடந்த11 ஆம் திகதி வியாழக்கிழமையன்று கடைக்காடு பிரதேசத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதோடு இந்த நிகழ்விற்கு இப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் முகந்திரம் .மதகுருமார்கள் படைத்தலைமையக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

12 வது படைத் தலைமையகம்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 12 வது படைத் தலைமையக படைப்பிரிவினரால் “திவினகுமகிராமியபிரபோத” எனும் அமைப்புடன் இணைந்து சின்னபுர கனிஷ்ட வித்தியாலயத்தில் இரத்ததான நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று 13 ஆம் திகதி இடம் பெற்றதோடு இந்த நிகழ்வில் இராணுவப் படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

62 வது படைத் தலைமையகம்

62 வது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத்தலைமையத்தின் படைப் பிரிவினரால் கடந்த மேமாதம் 10, 11ஆம் திகதிகளில் அன்னதானம் வழங்கள் மற்றும் வெசாக் நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டதோடு வெஹெரகல ரஜமகாவிகாரையின் விகாராதிபதி இபுல்கொடபங்ஞாஷீல அவர்களின் மதபோதனையும் இங்கு இடம் பெற்றது.

551 வது படைத் தலைமையகம்

551 வது படைத்தலைமையகத்தின் படைப்பிரிவினரால் “யாபாபடுநைய் தகம் அமாவய் 2017“ எனும் தலைப்பின் கீழ் பல நிகழ்வுகள் இடம் பெற்றது. கடந்த மே மாதம் 10 ஆம் திகதியன்று இத் தலைமையக வளாகத்தினுள் அன்னதானம் வழங்கள் நிகழ்வு இடம்பெற்றதோடு இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பருத்திதுறை பிரதேச செயலாளர் ஜே. ஜயசீலன் கலந்து சிறப்பித்துள்ளார்.

571வது படைத்தலைமையகம்

வெசாக் நிகழ்வினை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்புப் படைத்தலையகம், 57 வது படைத் தலையகம், 571 வதுபடைப்பிரிவு, மற்றும் 9வது விஜயபாகு காலாட்படையணி ஒன்றினைந்து மலயாலபுரம் எஸ். கே முதியோர் இல்லத்தினைத் சேர்ந்த 30 முதியோர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசு பொதிகள் கடந்த வியாழக்கிழமையன்று 11 ஆம் திகதி வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன கலந்துகொண்டார்.

மேலும் 57 வது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, 571 வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி, 9 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி உள்ளடங்களாக படைவீரர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கெமுனு ஹேவா படையணித் தலைமையகம்

குருவிட பிரதேசத்தில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணித் தலைமையகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிகளில் பௌத்தமத அனுஷ்டானங்களுக்கமைவாக சீலவியாபாரம் மதபோதனை .அன்னதானம் வழங்கள் நிகழ்வுகள் உள்ளடங்களான பல நிகழ்வுகள் இத் தலைமையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இப் படையணியின் படைத் தளபதி கலந்து கொண்டார்.

சாலியவெவ இராணுவதொழில் பயிற்சி மையம்

சாலியவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ தொழில் தகைமை பயிற்சி முகாமினால் வெசாக் பக்தி கீதபாடல்கள் மற்றும் அன்னதானம் வழங்கள் நிகழ்வூகள் இடம் பெற்றது.

Nike sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival