Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2018 10:16:15 Hours

பனா கொடையில் இராணுவப் படையினர் இணைந்து நடாத்திய புதுவருட நிகழ்வுகள்

பனாகொடை 4ஆவது இலங்கை பீரங்கிப் படையணி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான படையினரின் பங்களிப்போடு பலவாறான கேளிக்கை வினோத நிகழ்வுகள் உள்ளடங்களான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இடம் பெற்றது.

இவ 2018ஆம் ஆண்டிற்கான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் சேவா வனிதா சங்கத் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனாநாயகக் அவர்களும் கலந்து கொண்டதுடன் இவர்களை இராணுவப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத்பெணான்டோ அவர்கள் வரவேற்றதுடன் இந் நிகழ்வின் முதல் அம்சமானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து யுத்தத்தின் போது மரணித்த படை வீரர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தேசிய கீதம் மற்றம் இராணுவ கீதம் போன்றன இசைக்கப்பட்டது.

இதன் போது இடம் பெற்ற நிகழ்வுகளில் உயர் அதிகாரிகள் சேவா வனிதாவின் உறுப்பினர்கள் மற்றும் படையினர் சிவில் குழுவினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இதன் போது இடம் பெற்ற போட்டி நிகழ்வுகளாக ரபான் அடித்தல் கயிறிழுத்தல் தலையனை அடித்தல் வழுக்கு மரம் ஏறுதல் அழகு ராஜா மற்றும் ராணிப் போட்டி யானைக்கு கண் வைத்தல் பனிஸ் உண்னுதல் சைக்கிள் ஓட்டப் போட்டி வினோத உடைப் போட்டி மற்றும் பலவாறான கலாச்சார நிகழ்வூகள் போன்றன இடம் பெற்றன.

இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் பலவாறான பரிசுப் பொருட்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்காக பலவாறான சிற்றுண்டிப் பொருட்கள் குளிர்பாணங்கள் மதிய உணவுகள் போன்றன வழங்கப்பட்டன.

Sports News | Nike