Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2018 12:57:13 Hours

படையினரால் பாழடைந்த பாடசாலை கட்டிடத்தின் கூரைகளை சவாலுடன் அகற்றும் பணிகள்

பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 64 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியின் முழு ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்பில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப்பிரிவின் 642 ஆவது படைப்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சேவையில் இருக்கும் 23 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால கடந்த (03) ஆம் திகதி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கதலியர் சம்மன்னகுலம் அரசாங்க கலவன் பாடசாலையின் பாழடைந்த கட்டிடத்தின் கூரைகளை சவாலுடன் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

அதன்படி இப் பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளின் படி படையினர்களால் பாடசாலையை பார்வையிட்டபின்னர் மழையினால் ஏற்படும் காலநிலை காரணத்துடன் பாழடைந்த கட்டிடத்தின் கூரைகளால் ஏற்படும் ஆபத்து காரணமும் அதிபர் அவர்கள் படையினருக்கு சுற்றிகாட்டினார்.

மேலும், பாழடைந்த கட்டிடத்தின் கூரைகளின் இயல்பு காரணமாக கூரையை பழுதுபார்க்கும் பொறுப்பைச் செயல்படுத்த எந்த தச்சுக்காரரும் அல்லது வேறு எந்த தொழில்நுட்பமும் தயாராக இல்லை என்று அதிபர் அவர்கள் 64 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதிக்கு தெரிவித்தார்.

அதன் படி 642 ஆவது படைப் பரிவின் படையினர்களால் தொழிநுட்ப திறமையை பயன்படுத்தி இந் கூரை தகடுகள் மற்றும் பரால்களை அகற்றினர்.

இந்த திட்டம் எப்படி கடினமாக உள்ளது, 64 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் முழு ஒத்துழைப்புடன் இத் திட்டம் மேற் கொள்ளப்பட்டது.

இராணுவ படையினர் மழைக்காலத்திற்கு முன்னர் இராணுவ படையினரால் வழங்கப்பட்ட தாராளமான மனப்பான்மை மற்றும் வழங்கப்பட்ட சரியான உதவிக்கும் பாடசாலை அதிபர் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

Running sport media | Air Jordan