Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையனிகளுக்கு இடையிலான பெட்மின்டன் சம்பியன்ஷ் போட்டிகள்

பெட்மின்டன் 2019 ஆம் ஆண்டிற்கான சம்பியன் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம் மாதம் (17) ஆம் திகதி பனாகொடையிலுள்ள உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் இம் மாதம் (17) இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொறியியல் படையணியின் படைத் தளபதியும், தொண்டர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இவ்வருடம் ஜனவாரி மாதம் 13 ஆம் திகதி இந்த போட்டிகள் இராணுவத்திலுள்ள 16 படையணிகளை உள்ளடக்கி ஆரம்பமானது. பதினொரு கட்டங்களின் கீழ் ஆண். பெண், இருவர்களுக்கான ஆண், பெண் அணியினர்களுக்கு இடையில் இடம்பெற்றன. 35, 40, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இடையில் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

ஆண்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் முதலாவது இடத்தை பெற்று போர்கருவி படையணி சம்பியனாக திகழ்ந்தது. இரண்டாவது இடத்தை கஜபா படையணியும், மூன்றாவது இடத்தை விஜயபாகு காலாட் படையணி பெற்றுக் கொண்டது.

பெண்களுக்கு இடையிலான போட்டிகளில் முதலாவது இடத்தை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியும், இரண்டாவது இடத்தை இராணுவ மகளிர் படையணியும், மூன்றாவது இடத்தை இலங்கை சமிக்ஞை படையணியை பெற்றுக் கொண்டது.

இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த இரண்டாம் லெப்டினன்ட் H. M அபேரத்ன அவர்கள் சிறந்த விளையாட்டு வீரனாகவும், சிறந்த விளையாட்டு வீராங்கனையாக லான்ஸ் கோப்ரல் M. D. S. L பிரியரத்ன அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இராணுவ பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பூரக செனெவிரத்ன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் சாஜன் H. E ருவன் பதிரன மற்றும் கோப்ரல் W. H. M வீரசிங்க போன்ற பயிற்சியாளர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov