Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையனிகளுக்கு இடையிலான கடற்கரை கபடி போட்டிகள்

தேசிய மட்டத்தில் விளையாட்டு வீர ர்களுக்கு இடையில் இடம்பெறும் 2018 ஆம் ஆண்டு படையணிகளுக்கு இடையிலான இறுதி கபடி சுற்றுப் போட்டிகள் (17) ஆம் திகதி தங்கலை கடற்கரையில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் இராணுவ கபடி படையணி கலந்து கொண்டு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

தங்கல்ல கபடி சங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ கபடி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சனத் பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த போட்டிகளில் முப்படையினர் மற்றும் சிவில் விளையாட்டு கழகங்களுக்கு இடையில் இரண்டு நாட்கள் 25 வயதிற்கு குறைந்தவர்களுக்கும் ‘ஏ’ பிரிவு மற்றும் சுபர் லீக் 3 பிரிவுகளுக்கு கிழ் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

இருபத்திஐந்து வயதின் கீழ் இடம் பெற்ற கபடி போட்டியில் 19க்கு 43 புள்ளிகளை பெற்று இலங்கை பொலிஸ் கபடி அணியை தோற்கடித்து இலங்கை இராணுவ அணி வெற்றியை பெற்றுக் கொண்டது. அத்துடன்’ சுபர் லீக் இறுதி சுற்றுப் போட்டியில் இலங்கை கடற் படையின் மகளீர் படையணியுடன் போட்டியிட்ட இராணுவ மகளீர் படையணி 37 புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியுள்ளது.

இறுதிச் சுற்றுப் போட்டியில் 29 க்கு 35 புள்ளிகளை பெற்று ரெட் கெப் விளையாட்டு கழகத்தை தோற்கடித்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர். இருபத்தைந்துக்கு குறைந்த மகளீர் கபடி போட்டியில் 22 க்கு 44 புள்ளிகளை பெற்று விமானப் படை மகளீர் படையணியை தோற்கடித்து இலங்கை இராணுவ மகளீர் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ கபடி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சனத் பெரேரா அவர்கள் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசினை வழங்கினார்.

Adidas footwear | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth