Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டிகளில் கெமுனு ஹேவா படையணிக்கு வெற்றி

படையணிகளுக்கு இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் ஹெமுனு ஹேவா படையணியின் பி குழு வெற்றியை பெற்றுக் கொண்டது. இந்தப் போட்டிகள் பனாகொடை கிரிக்கட் மைதானத்தில் வியாழக் கிழமை (18)ஆம் திகதி இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் 14 கிரிக்கட் அணிகள் கலந்து கொண்டதுடன் இறுதி சுற்றுக்கு கஜபா படையணி மற்றும் ஹெமுனு ஹேவா படையணி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் 5 விக்கட்’ வித்தியாசத்தில் ஹெமுனு ஹேவா படையணி வெற்றியை பெற்றுக் கொண்டது.

முதலில் துடுப்பாடிய கஜபா படையணியைச் சேர்ந்த வீரர்கள் 35.2 ஓவர்களில் 115 ஓட்டங்களைப பெற்றனர். அதனை தொடர்ந்து துடுப்பாடிய கெமுனு ஹேவா படையணியினர் 5 விக்கட்டுகளை இழந்து 29.4 ஓவர்களில் 118 ஓட்டங்களைப் பெற்று பெற்றியடைந்தனர். இந்தப் போட்டிகள் மஹர சிறைச்சாலை மைதானம் மற்றும், பொறியியலாளர் படையணி மைதானம் மற்றும் பனாகொடை பீரங்கிப்படை தலைமையக மைதானங்களில் இடம்பெற்றது.

Sports Shoes | Nike Shoes