Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2020 14:25:00 Hours

படைக்கல சிறப்பணியின் புதிய படைத் தளபதி கடமை ஏற்பு

மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் இலங்கை இராணுவ படைக்கல சிறப்பணியின் படைத் தளபதியாக 01 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு 15 ல் அமைந்துள்ள இலங்கை இராணுவ படைக்கல சிறப்பணி தலைமையகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் தற்போது 12 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றி வருகிறார்.

புதிய படைத் தளபதியை 1 ஆவது இலங்கை இராணுவ படைக்கல சிறப்பணியின் வாயிலில் இராணுவ படைக்கல சிறப்பணி நிலையத் தளபதி பிரிகேடியர் எம்எஸ் தேவப்பிரிய இராணுவ படைக்கல சிறப்பணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்ணல் எஸ்ஜே சமரசிங்கவுடன் இணைந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் மங்கள விளக்கேற்றி இலங்கை இராணுவ படைக்கல சிறப்பணியின் ஆலோசணை சபை உறுப்பினர்கள மற்றும் கட்டளை அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றியதுடன் சந்தன மரக்கன்று ஒன்றை நட்டி வைத்தார். அத்துடன் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார்.

பின்னர், அதிகாரிகளுக்கு தனியாக உரையாற்றினார் இதன போது இலங்கை இராணுவ படைக்கல சிறப்பணியின் மேம்பாட்டிற்கு அதிகாரிகளின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். jordan release date | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp