Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

நீச்சல் போட்டியில் இராணுவ ஆண் நீச்சல் போட்டியாளர்கள் சம்பியனாக தேர்வு

இலங்கை இராணுவத்தினால் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டிகளில் ஒன்பதாவது தடவையாகவும் இராணுவ (ஆண்) நீச்சல் போட்டியாளர்கள் சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த இறுதிப் போட்டிகள் கொழும்பு காலிமுகம் கடலிலே இடம்பெற்றது. இப் போட்டிகளில் 28 ஆண் போட்டியாளர்களும் 6 பெண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

இராணுவ ஆண் நீச்சல் குழுவினர் சம்பியனாகவும் இராணுவ மகளீர் படையணி மூன்றாவது இடத்தையும் இந்த போட்டியில் பெற்றுக் கொண்டனர்.

இந்த போட்டிகளை இராணுவ நீச்சல் சங்கத்தின் தலைவர் மற்றும் இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஜி.ஐ வித்யானந்த அவர்களது தலைமையிலும் பங்களிப்புடனும் இடம்பெற்றது.

மேலும் இந்த போட்டியின் போது இராணுவ நீச்சல் சங்கத்தின் பிரதி தலைவர் கேர்ணல் ஏ.சி.ஏ டீ சொயிஷா, நீச்சல் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்கள் இணைந்திருந்தனர். Best Sneakers | Men's Footwear