Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2018 12:25:41 Hours

தொனிகல ‘தஹம் பாசல்’ மாணவர்களுக்கு நன்கொடைகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் தொனிகலை ஞானவாச ‘தஹம் பாசல்’ மாணவர்களுக்கு 50,000 ரூபாய் பெறுமதிமிக்க நிலையியல் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக (10) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களது முழுமையான எற்பாட்டுடன் பிரிகேடியர் கே.ஜி.டீ பெரேரா அவர்களது ஒருங்கினைப்புடன் சம்பியன் ரைடர் உபில்வன் சேரசிங்க அவர்களது அனுசரனையுடன் இடம்பெற்றன.

ஞானவாச தஹம் பாசலில் சலுகை பெற்ற மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வானது 62 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் 62 ஆவது படைப் பிரிவின் முதலாம் தரத்தில் உள்ள பதவி நிலை உத்தியோகத்தர்கள், சிவில் ஒருங்கினைப்பு அதிகாரி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , ஞானவாச தஹம் பாசல் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

Sports Shoes | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today