Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2020 22:47:08 Hours

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லும் வீதி படையினரால் மீள் நிர்மானிப்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனைக்கு செல்லும் வீதி இராணுவப் படையினரால் மீள் நிர்மானிக்கப்பட்டது. யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் திருமதி அருந்ததி எட்வட்புள்ளை அவர்களின் சமூக நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அவரது நிதி அனுசரனையுடன் இந்த வீதி மீள்நிர்மானிக்கப்பட்டன.

இந்த கட்டிட மீள் நிர்மான பணிகள் 10 ஆவது பீரங்கிப் படையணி, 10 ஆவது பொறியியல் படையணி, 2 ஆவது கெமுனு காலாட் படையணி மற்றும் 5 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

மீள் நிர்மானிக்கப்பட்ட வீதி திறப்பு விழாவானது இம் மாதம் (11) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த நிகழ்வில் நன்கொடையாளியான திருமதி அருந்ததி எட்வட்பிள்ளை, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, வடக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர், வைத்தியர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோர் அங்குள்ள நோயாளர்களை பார்வையிட மருத்துவமனைக்கு இந்த வீதியால் செல்கின்றனர். இந்த வீதிகள் பள்ளமும், குழியுமாக இருப்பதனால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த வீதியில் இடைத்தங்கள் சுபசாதனை நிலையமும் அமைந்திருப்பதால் இதை அவதானித்த படையினர் இந்த வீதி மீள் நிர்மானிப்பு பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes brand | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ