Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st August 2017 10:02:33 Hours

தென் இந்திய இராணுவத் தளபதி திருகோணமலை மற்றும் யாழ்பாணத்திற்கு விஜயம்

அன்மையில் நல்லிணக்க விஜயத்தை ,கிட்டத் தட்ட நான்கு நாட்களாக மேற்கொண்ட தென் இந்திய இராணுவப் படைத் தலைமையகத்தின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பி எம் ஹரிஸ் அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர மற்றும் யாழ்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ரோரை கடந்த வெள்ளிக் கிழமை (18) மற்றும் சனிக் கிழமை (19) போன்ற தினங்களில் சந்தித்தார்.

இவ்வாறு பலாலி விமான நிலையத்திற்கு வருகை தென் இந்திய தளபதியவர்களை யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிறுவாக அதிகாரியான பிரிகேடியர் அஜித் அலவத்த அவர்கள் வரவேற்றார்.

மேலும் இவர் யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியை சந்திந்ததுடன் இப் படைத் தளபதியவர்களால் யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகள் பற்றி விபரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவ் இராணுவ அதிகாரிகளால் எல் ரி ரீ ஈ யினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் துாபிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் இவ்விரு தளபதிகளுக்குமிடையே நினைவுச் சின்னங்கள் கையளிக்கப்பட்டதோடு தென் இந்திய இராணுவத் தளபதியவர்களால் விசேட அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.

அதே வேளை இத் தளபதியவர்கள் ,கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் நத்தன சேனாதீர அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். Mysneakers | Air Jordan Release Dates 2020