Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2018 11:17:08 Hours

திருகோணமலையில் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் படைத் தலைமையக வளாகத்தினுள் இப்தார் நிகழ்வு திருகோணமலையில் (5) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு திருகோணமலையில் உள்ள குச்சவேலி, கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலாகாமம் மற்றும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 110 மௌவிகள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை ஜம்மியாதுல்லா உல்மா பள்ளியின் மௌவியும் கிண்ணியா பள்ளியின் மௌவி அவர்களால் இந்த ரம்லான் மாதம் தொடர்பாக சொற்பொழிவு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உறையாற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் சமய மத தலைவர்களான பௌத்த மதத்தைச் சேர்ந்த ஜயசுமணராம விகாரையைச் சேர்ந்த ஞானகீர்த்தி தேரர் அவர்களும், இந்து மதத்தைச் சேர்ந்த ரவி குருக்களும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அருட் தந்தை ரொயிஷன் ரெக் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாணத்தின் பிரதான செயலாளர் டீ.எம்.எஸ் அபேகுணவர்தன, மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ புஸ்ப குமார, 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, திருமலை மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.என்.ஜி பெரேரா, 222 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் தீபால் புஸேல்ல, 224 ஆவது படைத் தளபதி கேர்ணல் பி எதிரிவீர முப்படையைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

Running Sneakers Store | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE