Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2020 18:31:12 Hours

தாய்நாடு மற்றும் இராணுவத்தின் சேவையில் ஓய்வு பெற்றும் பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதி பாராட்டு

இராணுவத்தின் பதவி நிலை பிரதானியும், இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் 36 ஆண்டுகளுக்கு மேலாக வீரமிக்க உன்னத தலைமைத்துவத்தினை இராணுவத்திற்கு வழங்கி ஓய்வு பெறுவதை முன்னிட்டு வியாழக்கிழமை 28 ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று சந்தித்தார். இவர்கள் இருவரும் தியதலாவை இலங்கை இராணுவ கல்லூரியின் பாநெறி இல 19 இன் அதிகாரிகள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இவர்கள் 1984 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி ( பாடநெறி இல 19 ) இராணுவத்தில் இணைந்துக் கொண்டனர். இதன் போது லெப்டினன்ட் ஜெனரல் சில்வா தங்களது பயிற்சிக் கால பழைய உறவுவின் அனுபவங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போதான மகத்தான ஒத்துழைப்புக்களையும் இராணுவ அமைப்பின் வளர்சிக்கு வழங்கிய அர்பணிப்பையும் தனது நினைவு கூர்ந்தார். மேஜர் ஜெனரல் லியானகே அவர்கள் இராணுவத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் உன்னத மரியாதைக்குரிய சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 3 வது அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டார், போர் வெற்றியின் பின்னர் 52, 55 மற்றும் 64 வது படைப்பிரிவுகளின் தளபதியாகவும் பணியாற்றிருந்தார்.

லெப்டினன்ட் ஜெனரல் சில்வா விடைப்பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரியான பாடநெறி சகாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், அதே வேளையில் அவரின் எதிர்கால செயற்பாடுகளுக்கு அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார், மேலும் குறிப்பாக நாடு ஆபத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரது நேர்மையான அர்ப்பணிப்பு சேவையை பாராட்டி பேசினார், அன்பான நட்பின் அடையாளமாக உறவுகளின் அடையாளமாக லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அவர்கள் நினைவு பரிசு ஒன்றினையும் வழங்கினார். கொவிட் -19 வைரஸ் தடுப்பின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இராணுவத்தின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.. நிகழ்வின் நிறைவில் ஓய்வு பெற்றும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதிக்கு தனது இராணுவ வாழ்க்கையில் ஒரு பாடநெறி சகாவாக வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் தோழமைக்கும் நன்றி தெரிவித்தார்.

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான சுய விவரம் வருமாறு.

மேஜர் ஜெனரல் லியானகே, பாடநெறி இலக்கம் 19 ஊடாக இராணுவ சேவையில் இணைந்துக் கொண்டு ஆற்றிய மகத்தான சேவையை கௌரவித்து மேஜர் ஜெனரல் லியனகே அவர்கள் வீர விக்ரம விபூஷணம், ரண விக்ரம பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு கிழக்கு நடவடிக்கை பதக்கம், இராணுவ நீண்ட கால சேவைப் பதக்கம், இராணுவ 50 ஆண்டு விழா பதக்கம், மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், ரிவிரெச பதக்கம் மற்றும் 50 ஆவது சுதந்திரதின பதக்கம் ஆசியவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் கர்ணல் இராணுவச் செயலாளர், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி, பொது நடவடிக்கைகள் மற்றும் முறைமை பணிப்பகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் இணைப்பதிகாரி போன்ற பல உயர் பதவிகளை வகித்தவர். இவர் பின்பற்றிய பாடநெறிகள் வருமாறு இராணுவ இளம் அதிகாரிகள் பாடநெறி, நகர்வு பயிற்றுவிப்பாளர் பாடநெறி, இந்தியாவின் சிரேஸ்ட கட்டளைகள் பாடநெறி, பாகிஸ்தானில் மத்திய தொழில்த்துறை பாடநெறி, பங்களாதேஷில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணிகள் பாடநெறி, அமெரிக்க படைக்கல அதிகாரிகளின் உயர் பாடநெறி மற்றும் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு பாடநெறி திருகோணமலை 4வது படைக்கள சிறப்பணி கட்டளை அதிகாரியாகவும் 523 படைத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

இராணுவ வாழ்க்கைக்கு புறம்பாக ஒரு கல்வியாளராக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரியா லியானகே பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில இராஜதந்திர மற்றும் வெளி விவகார டிப்ளோமாவும் இந்தியாவின் பாதுகாப்பு முகாமை டிப்ளோமாவும் கற்றுள்ள அவர் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியலுக்கான முதுமானி பட்டப்படிப்பில் முதல் தர சித்திப் பெற்றுள்ளார். வாஷிங்டன் தெற்காசியா மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தில் நடைபெற்ற ‘முறைமை சீர்திருத்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளார். ‘மாலத்தீவில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகள்’ என்ற கருத்தரங்கிலும் கலந்து கொண்டுள்ளவார்.

மேஜர் ஜெனரல் லியனகே கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர் ஆகும், அங்கு விளையாட்டுத் துறையில், குறிப்பாக கிரிக்கெட், ரக்பி கால்பந்து, தடகள மற்றும் மாணவச் சிப்பாய்யாக திறமைகளை வெளிக் காட்டியவர். ரக்பி கால்பந்து மற்றும் கிரிக்கெட் துறைகளில் வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கல்லூரி வர்ண்ணங்கள் வழங்கப்பட்டன. இடைநிலைக் கல்வியின் பின்னர், அவர் மார்ச் 5ம் திகதி 1984 அன்று ஒரு கெடற் அதிகாரி இலங்கை இராணுவத்தின் நித்திய படையில் இணைந்தார் மற்றும் இலங்கை இராணுவ தியதலாவையில் இராணு அடிப்படை பயிற்சியை முடித்துக் கொண்டி. நவம்பர் 16ம் திகதி 1985 அன்று இரண்டாம் லெப்டினன்ட் பதவியில் ஆணையதிகாரம வழங்கப்பட்டது. latest Running | Nike