Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2019 16:07:35 Hours

சேவையிலிருந்து ஓய்வு பெறும் இராணுவ பெண்களுக்கான பொருளாதார மேம்பாடு.

சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் 5(தொண்) இலங்கை இராணுவ பெண்கள் படையணியைச் சேர்ந்த இராணுவ பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு தேனீ வளர்பிற்கான சுய தொழில் ஏற்பாடானது இராணுவ ஓய்வூதிய சேவை நலன்புரித் திட்டத்தின்(விவசாய) ஒத்துழைப்புடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வானது தளுகெனவிலுள்ள 5இலங்கை இராணுவ பெண்கள் படை தலைமையக வளாகத்தினுள், பிரதம அதீதியான பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.சுனில் சமரவீர அவர்களின் தலைமையிலும் கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர முதன்மை தொழிற்துறை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் தொழிநுட்ப பணிப்பாளர் திரு. திஸ்ஸ பண்டார, பிரிகேடியர் வன்டித மஹின்கன்ட, கிழக்கு பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் கேனல் ஜே.எம்.ஆர்.கே.ஜயமன்ன, 232 வது படைத் தளபதி மற்றும் 5இலங்கை இராணுவ பெண்கள் படையின் கட்டளை அதிகாரி பி.எச்.எஸ். பென்னான்டோ ஆகியோரின் பங்கேற்புடனும் திங்களன்று (25) இடம்பெற்றது.

மேலும் இத்திட்டத்தின் நோக்கமானது ஓய்வு பெற்ற இராணுவ பெண்களுக்கான மேலதிக வருமான வழியினை ஏற்படுத்தி நாட்டினது வேளாண்மை பொருளாதாரத்தை மேம்படுத்தளில் அவர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வதாகும். best Running shoes | Men’s shoes