Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சிரேஷ்ட தேசிய கொக்கி போட்டியில் ‘பாதுகாப்பு சேவை கொக்கியணிக்கு வெற்றி

கடந்த (21) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு 7 இல் அமைந்துள்ள கொக்கி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதி கொக்கி சுற்றுப் போட்டியில் பாதுகாப்பு சேவை கொக்கியணி பெற்றியை சுவீகரித்து கொண்டது.

இந்த இறுதி சுற்றுப் போட்டிகள் கொழும்பு சமூக சேவை அணி மற்றும் பாதுகாப்பு சேவை கொக்கியணிக்கு இடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் 5 – 0 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி பாதுகாப்பு சேவை ஆண்கள் அணி 61 புள்ளிளை பெற்று வெற்றியீட்டியது.

பாதுகாப்பு சேவை மகளீர் அணி மற்றும் கொழும்பு கொக்கி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த இறுதி சுற்றுப் போட்டியில் 6 – 0 என்ற அடிப்படையில் பாதுகாப்புசேவை மகளீரணி வெற்றீயிட்டு 29 புள்ளிகளைபெற்றுள்ளது.

இலங்கை விளையாட்டு அபிவிருத்தி அமைச்சினால் 6 ஆவது தடைவையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போட்டிகள் ஜனவாரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இப்போட்டியில் பாதுகாப்பு சேவை, பொலிஸ் மற்றும் சிவில் அணியினரின் 18 ஆண்கள் அணியும், 10 மகளீர் அணியும் கலந்து கொண்டது.

இராணுவ விளையாட்டு வீரர்கள் 7பேரும், கடற்படை விளையாட்டு வீரர்கள் 4பேரும் மற்றும் விமானப்படை விளையாட்டு வீரர்கள் 7 பேரும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இரத்தினபுரி அணி 20 – 0 என்ற அடிப்படையிலும், வென்னப்புவ அணி 20 – 0 என்ற அடிப்படையிலும், பல்கலைக்கழக அணி 6 – 0 என்ற அடிப்படையிலும் மற்றும் வியாபார சமூக அணி 10 – 1 என்ற அடிப்படையலில் வெற்றியை சுவீகரித்து கொண்டது.

அதற்கு மேலாக இராணுவ அணியில் 4 பேரும், கடற்படையில் 09 பேரும், விமானப் படையில் 5 பேரும் பாதுகாப்பு சேவை மகளீர் அணியில் போட்டியிட்டு வென்னப்பு விளாயட்டு அணியை 10 – 0 என்ற அடிப்படையிலும், இலங்கை பல்கலைக்கழக அணியை 2 – 0 என்ற அடிப்படையிலும், களுத்தறை அணியை 4 – 0 என்ற அடிப்படையிலும்,கொழும்பு அணி 1 – 0 என்ற அடிப்ப டயிலும், கண்டி அணி 4 – 0 என்ற அடிப்படையில் போட்டியிட்டி பாதுகாப்பு மகளீர்சேவை அணி வெற்றியை சுவீகரித்து கொண்டுள்ளது.

பாதுகாப்பு சேவை மற்றும் இராணுவ கொக்கி சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய இந்த பாதுகாப்பு சேவை அணியானது தங்களது திறமைகளை வெளிக்காட்டியுள்ளது.

best Running shoes brand | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov