Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2018 15:49:43 Hours

சிங்கப் படையணியின் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி

இலங்கை சிங்கப் படையணியின் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி கொழும்பில் அமைந்துள்ள ‘தாமரை தடாக’ அரங்கில் செவ்வாய்க் கிழமை (3) ஆம் திகதி மாலை மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதி மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களையும் சிங்கப் படையணியின் படைத் தளபதி மற்றும் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் வரவேற்றார்.

பின்பு பிரதம அதிதி மற்றும் அதிதிகளின் பங்களிப்புடன் மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றன. அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டன.

சிங்கப் படையணியில் விளையாட்டுகளில் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய இராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்ற விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இலங்கையில் புகழ்பெற்ற நடன குழுவினர்களான பிரதீபா ஆரியவங்ஷ அவர்களினால் ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு நடனங்களை வெளிக்காட்டி நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் கவர்ந்தனர்.

சிங்கப் படையணியில் சர்வதேச, தேசிய ரீதி மற்றும் பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி திறமைகளை வெளிக் காட்டிய விளையாட்டு வீரர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்ன, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர்.

சிங்கப் படையணியின் வர்ண இரவு நிகழ்ச்சிகள் சிங்கப் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் ராஜிவ விக்ரமசிங்க அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

Adidas shoes | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet