Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2019 18:35:38 Hours

சர்வதேச கிரைசீஸ் குழுவினர் இராணுவத் தளபதியை சந்திப்பு

பிரித்தானி சர்வதேச கிரைசீஸ் குழுவின் திட்டமிடல் பணிப்பாளரும் உயர் ஆய்வாளருமான திரு அலன் கெணான் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இன்று காலை (09) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்ததுடன் நல்லிணக்கத்தை வட மாகாணத்தில் மேற்கொள்ளும் நோக்கில்; இராணுவத்தின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவத்தின் நலன்புரித் திட்டத்தினூடாக வறுமைக் கோட்டின் கீழ் காணப்படும் மக்களுக்கு உதவி புரிதல் கல்வி விவசாயம் மற்றும் பொருளாதார மேம்பாடு வீடமைப்பு திட்டங்கள் பாடசாலை உபகரணப் பொருட்கள் சைக்கிள்கள் போன்றவற்றை வழங்கல் போன்றவற்றையும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் இராணுவமானது வன்முறையில் இருந்து மீட்கப்பட்ட 13 000 போராளிகளை சமூகத்துடன் ஒன்றினைந்து தமது வாழ்வை கொண்டு செல்வதற்கான வழிகளை அமைத்தமை உலக சாதனையை எய்தியுள்ளது.

இதன் போது இராணுவத் தளபதியவர்கள் சமாதானமான சமூகத்தை உருவாக்குவதற்காக நவீன மயப்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளவத்கான சாதனங்கள் போன்றன பயன்படுத்தப்படுவதை அவர் தெரிவித்தார். மேலும் அவர் திரு அலன் கெணான் அவர்களிடம் நடளாவிய ரீதியில் இராணுவத்தின் சேவைகள் தொடர்பாக மேலும் விபரங்களை அறிய விரும்பின் வினா கோவையை கையளிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இக் கலந்துiராயடலில் மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன பணிப்பாளர் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியவர்கள் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் பிரதாப் திலகரத்தின அவர்களும் கலந்து கொண்டார். Sportswear Design | NIKE RUNNING SALE