Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2020 23:30:23 Hours

சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு படையினரால் உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரஷிக குமார அவர்களது பூரன ஏற்பாட்டில் மஹாவிலாச்சிய பேமதுவ பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் பௌத்த ‘சில்’ ஆடைகள் இம் மாதம் (9) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நலன்புரி சமூக திட்டத்தின் கீழ் 130 நபர்களுக்கு மூக்கு கண்ணாடிகளும், 75 நபர்களுக்கு பௌத்த ‘சில்’ ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டன. நன்கொடையாளிகளான திருமதி லாலனி லியனகே, திரு நந்தலால் மாலகொட அவர்களது நிதி அனுசரனையுடன் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

சமூ நலன்புரி திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன, திரு நந்தலால் மாலஹொட, மூத்த நடிகர்களான திருமதி சுவீநீதா வீரசிங்க, திருமதி லாலனி லியனகே, அநுராதபுர ‘விஷன் ஹெயார்’ நிலையத்தின் முகாமையாளர் திரு ரஞ்ஜித் சுமிந்த, 212 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அனில் பீரிஸ், 213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரஷிக குமார போன்றோர் இணைந்திருந்தனர். Best Authentic Sneakers | NIKE AIR HUARACHE