Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2018 13:49:00 Hours

கெமுனு காலாட் படையணியின் வர்ண இரவுகள் நிகழ்ச்சி

இலங்கை இராணுவத்தின் கெமுனு காலாட் படையணியின் வர்ண இரவுகள் நிகழ்ச்சி கொழும்பில் அமைந்துள்ள தாமரை தடாகத்தில் (12) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து கெமுனு காலாட் படையணியில் விளையாட்டு துறைகளில் திறமையை வெளிக் காட்டிய வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இந்த நிகழ்விற்கு வருகை தந்தார்.

இந்த வர்ண இரவு நிகழ்ச்சிகள் கெமுனு காலாட் படையணியில் விளையாட்டு துறைகளில் சாதனைகளை படைத்த 102 விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் முகமாக இடம்பெற்றன.

நிகழ்வில் முதல் அங்கமாக பிரதம அதிதி உட்பட மூத்த இராணுவ உயரதிகாரிகளினால் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது . அதனை தொடர்ந்து நாட்டிற்காக உயிர்களை தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இராணுவ கீதம் மற்றும் கெமுனு காலாட் படையணி கீதமும் இந்த நிகழ்வில் இசைக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு சென்று போட்டிகளில் சர்வதேச ரீதியில் திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களுக்கு பிரதம அதிதியினால் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்துடன் இராணுவ தளபதியினால் இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தப்பட்டன.

இலங்கை இராணுவத்தில் கெமுனு காலாட் படையணியினால் ‘வடமராச்சி’, ‘சத்பல’, ‘பலவேகய’, திரிவிட பலய, அகுனு பஹர, ரிவிரெச, எடிபலய மற்றும் ஜயசிக்குரு போன்ற சிறந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது 138 அதிகாரிகளும், 3031 படை வீரர்கள் இந்த நாட்டிற்காக தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். 12 அதிகாரிகள் மற்றும் 393 படை வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன 63 அதிகாரிகள் மற்றும் 1438 படை வீரர்கள் காயத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordans | Nike Running